பக்தர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய கடவுள்
இந்த உலகில் நாம் நம்பக்கூடிய ஒரே விஷயம் கடவுள் தான்.உலகமே ஒரு மாயை என்பதை தாண்டி கடவுள் மட்டும் நிஜம் என்பதை எல்லோரும் ஏற்று கொள்வோம்.அந்த வகையாக கடவுள் நமக்கு ஆசி வழங்குபவராக அல்லாமல் நமக்கு வாழ்க்கை வாழ ஒரு எடுத்து கட்டாகவும் இருக்கிறார்.
ஒரு முறை ஆன்மீக சொற்பொழிவு நடந்து கொண்டு இருக்க பயிற்சியாளர் கூட்டத்தை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.அதாவது நாட்டில் மிகவும் பணக்கார கோயில் எது?என்று அவர் கேட்கிறார்.அதற்கு கூட்டத்தில் எல்லோரும் ஒரே குரலாக திருப்பதி வெங்கடாசலபதி என்று பதில் சொல்கின்றனர்.
பிறகு அந்த பயிற்சியாளர் ஏன் திருப்பதி வெங்கடாசலபதி நாட்டில் மிக பெரிய பணக்கார கோயிலாக கருதப்படுகிறார் என்ற விளக்கம் தெரியுமா என்று கேட்க,அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்கள் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் கொடுத்த பதில் எதுவும் பயிற்சியாளரை திருப்தி படுத்தவில்லை.பிறகே அவரே முன் வந்து பதில் அளிக்கிறார்.எத்தனையோ இடங்களில் பெருமாள் கோயில் இருக்கிறது.ஆனால் திருப்பதியில் மட்டும் தான் சவாமி இரவு 12 மணி வரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்.
பிறகு மீண்டும் காலையில் மூன்று மணிக்கு எழுந்து தரிசனம் தருகிறார்.இதில் பகலில் அவர் சற்று நேரம் கூட ஓய்வு எடுப்பதில்லை.பிற கோயில்கள் எல்லாம் இரவு சரியாக 8 மணிக்கெல்லாம் நடை சாற்றி விடுவார்கள்.பகலில் நிச்சயம் ஓய்வு உண்டு.
ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் சேரும் என்று கடவுளுக்கு பொருந்தும் பொழுது மனிதர்கள் நாம் யார்? ஆக உழைத்தால் முன்னேறலாம் என்று இறைவன் எடுத்துக்காட்டாக இருக்கிறார் மனிதனும் அதை பின் தொடர வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |