கருமஞ்சள் இருக்கும் இடத்தில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது

By Sakthi Raj Apr 22, 2024 09:42 AM GMT
Report

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மஞ்சளுக்கு எண்ணற்ற பயன்கள் உண்டு. மேலும் சித்த மருத்துவத்தில் கருப்பாக இருக்கும் பொருட்களின் மதிப்பை உயர்ந்ததாக சொல்வார்கள்.

அதன்படி, கருந்துளசி, கருநொச்சி, கருநெல்லி வகையில் கருமஞ்சளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இது பார்ப்பதற்கு கருநீல நிறமாக இருக்கும்.

இதை மருத்துவத்தில் பாம்பு கடி, ஆஸ்துமா, பைல்ஸ் போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் சருமத்திற்கு நல்ல பொலிவை தரக்கூடியது.

கருமஞ்சள் இருக்கும் இடத்தில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது | Karumanjal Black Turmeric Kalidevi Parikarangal

கல்கத்தாவில் காளி பூஜையில் கருமஞ்சளை காளிக்கு படைப்பது மிகவும் விசேஷமாகும். இந்த கருமஞ்சள் இந்தியாவில் நர்மதா நதிக்கரையிலும், மத்தியபிரதேசத்திலும் வளரக்கூடியது.

இதை மருத்துவம் மற்றும் ஆன்மிகத்திற்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். கருமஞ்சள் இருக்கும் இடத்தில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிக உணர்வு ஏற்படும்.

மேலும் இது இருக்கும் இடத்தில் தீய சக்திகள், பில்லி சூன்யம் போன்றவை அண்டாது என்றும் சொல்லப்படுகிறது.

கருமஞ்சள் இருக்கும் இடத்தில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது | Karumanjal Black Turmeric Kalidevi Parikarangal

காரிய வெற்றி தரும் சக்தி கருமஞ்சளுக்கு உண்டு. பூஜைக்குப் பயன்படுத்தப்படும் கருமஞ்சள் காய்ந்ததாகவே இருக்க வேண்டும்.

இந்தக் கருமஞ்சளை பணப்பெட்டி, நகைப்பெட்டி, வியாபாரம் செய்யக்கூடிய இடம் ஆகியவற்றில் வைப்பது நன்மையை தரும்.

கருமஞ்சளில் ஒரு சின்ன துண்டை சிவப்பு துணியில் வைத்து வீட்டினுடைய நுழைவாயிலில் கட்டி வைத்துவிட்டால், எந்தவித கெட்ட சக்தியும் வீட்டுக்குள் அண்டாது.

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை


கருமஞ்சளில் ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. வீட்டில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது பீங்கான் பவுலில் கருமஞ்சள், கருமிளகு, கருப்பு உப்பு ஆகியவற்றை சேர்த்து போட்டு ஹாலிலோ அல்லது பூஜையறையிலோ வைத்தால், நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி நல்ல சக்தியை ஈர்க்கும்.

கருமஞ்சள் சனி மற்றும் ராகுவால் ஏற்படும் தடைகளை நீக்கும். இதை கழுத்தில் அணிந்து கொண்டால் நெகட்டிவ் எனர்ஜி நீங்கி, பாசிட்டிவிட்டி கிடைக்கும்.

கருமஞ்சள் இருக்கும் இடத்தில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது | Karumanjal Black Turmeric Kalidevi Parikarangal

இந்த கருமஞ்சளை குழைத்து திலகமிட்டு கொண்டு வெளியிலே சென்றால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அதேபோல், கருமஞ்சளை முகத்தில் தடவினால் வசீகரம் உண்டாகும். கணவன் மனைவி சண்டை போன்றவற்றை சரிசெய்யக் கூடிய ஆற்றல் கருமஞ்சளுக்கு உண்டு.

இது இந்தோனேசியா மற்றும் இமயமலை பகுதிகளில் அதிகம் விளைகிறது. கருமஞ்சள் இங்கே கிடைப்பது சற்று அரிதான விஷயமாக இருந்தாலும், நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்குவது சிறந்ததாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US