உலகத்தில் தலை சிறந்த தர்மம் எது?
மனிதனுக்கு உணவு என்பது மிக தேவையான ஒன்று.பிறர் பசியால் வாடுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் எவன் ஒருவன் அவனே முன் வந்து அவர்களின் பசியை ஆற்றுகிறானோ அவனே தலை சிறந்த மனிதன்.அந்த செயல் பல தலைமுறைக்கும் அவனை காப்பாற்றும்.
ஆனால் இதை விட பலமடங்கு பலன்கள் வழங்கக்கூடியது ஒருவர் வாயில்லா ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பது.இவ்வாறு உணவு வழங்கும் பொழுது நம்முடைய கர்மவினைகள் படிப்படியாக குறையும்.நாம் இப்பொழுது எந்த பறவைகளுக்கு விலங்குகளுக்கு உணவு வணங்குவதால் என்ன பலன்கள் பெறலாம் என்று பார்ப்போம்.
பொதுவாக வீடுகளில் தினமும் காகங்களுக்கு உணவு வைப்பதை மறப்பதில்லை.இவ்வாறு காகங்களுக்கு உணவு வழங்கும் பொழுது நம் முன்னோர்களின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.அகால மரணம்,திடீர் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க குரங்குகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
நாய்களுக்கு உணவு வழங்குவதால் நாம் எண்ணற்ற பலன்களை பெற முடியும்.மேலும் நாய்கள் தெருவிலும்,சுற்று சூழலில் அதிக அளவு காணமுடியும்.நாய்களுக்கு உணவளித்து வந்தால், நவகிரக தோஷம் நீங்கும்.
நம் வாழ்வில் உண்டாகும் தடைகளும், துன்பங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.செல்வம் பெறுக,யோகம் உண்டாக பசுக்களுக்கு நாம் உணவு வழங்க வேண்டும்.மீன்களுக்கு தேடி சென்று உணவு அளித்தால் தோஷங்கள் பாவங்கள் நம்மை விட்டு விலகுகிறது.
முருகப்பெருமானின் வாகனமான மயிலுக்கு உணவு வழங்கும் பொழுது தெரியாமல் செய்த குற்றங்கள் இருந்து விடுபடலாம்.கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உருவாகும்.எறும்புகளுக்கு உணவு வழங்கி வந்தால் கடன் சுமை குறையும்.
குதிரைக்கு தொடர்ந்து உணவளித்து வருவதன் மூலம் நம்மை செல்வந்தனாக்கும், ராஜ வாழ்க்கையை தரும், அரசியலில் வெற்றியைத் தரும்.யானைகளுக்கு உணவு வழங்கினால் அதிர்ஷ்ட கதவு திறக்கும்.பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வந்தால் திருமணம் கைகூடும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |