ஜாதகத்தில் கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தால் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?
ஜோதிட ரீதியாக கேது பகவான் பற்றின்மையை குறிக்கக் கூடியவராக இருக்கிறார். அந்த வகையில், அவர் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அந்த ஜாதகர் எந்த மாதிரியான பலன்களை பெறுவார் என்பதை பற்றி பார்ப்போம்.
மூன்றாம் இடத்தில் கேது பகவான் இருக்கின்ற பொழுது இந்த நபர்கள் யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் சொந்த முயற்ச்சிகள் முன்னேற கூடியவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் கைவிட்ட காரியத்தை இவர்கள் சாதிக்கக் கூடிய வலிமையை பெறுகிறார்கள்.

மேலும், தொழிலில் இவர்களுக்கு என்று ஒரு தனி பாதையை உருவாக்கி பயணிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். வித்தியாசமான முயற்சிகளில் இவர்கள் வெற்றி பெறக்கூடியவர்கள். பொதுவாக, மூன்றாம் இடம் என்பது சகோதர ஸ்தானத்தை குறிக்க கூடியதாக இருக்கிறது.
இங்கு கேது பகவான் அமர்ந்திருக்கின்ற பொழுது உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்காமல் போகலாம். இருப்பினும் சோர்ந்து போகாமல் அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் தெளிவான பாதையில் அமைத்து கொள்கிறார்கள்.

மூன்றாம் இடத்தில் கேது இருக்கின்ற பொழுது எழுத்து, பேச்சு, தகவல் தொடர்பு துறைகளில் தனித் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இருப்பினும், தொடங்கிய காரியத்தை கைவிடாமல் தொடரும் பொழுது இவர்கள் வலுவான வெற்றியை பெறலாம்.
இவர்கள் ஒருவருடைய ஆலோசனையை கேட்பதை காட்டிலும் அவர்களுடைய அனுபவத்திற்கே மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். துணிந்து பேசக்கூடிய குணம் இருந்தாலும் அந்த துணிவே சில நேரங்களில் இவர்களுக்கு எதிரிகளை உருவாக்க கூடியதாகவும் இருக்கிறது. சில நேரங்களில் நல்ல தொடர்புகளையும் விலகச்செய்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |