வாழ்க்கையை மாற்றப்போகும் கேது பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஆரம்பம்
நவகிரகங்களில் மிகவும் முக்கியமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். கேது பகவான் எப்பொழுதும் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர். பொதுவாக இந்த கேது எந்த கிரகங்களோடு சேர்கிறாரோ, அந்த சேர்க்கையால் ஒருவர் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கிறது. அந்த வகையில் நாளை நடக்க இருக்கும் கேது பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு வாழ்க்கையில் மாற்றம் பெற்று அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி அவர்கள் வேலையில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் சரி செய்யப்போகிறது. நீண்ட நாட்களாக கைகளுக்கு வராத பணம் இவர்களை வந்து சேரும் காலம். இன்னும் சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி வாழ்க்கையில் இத்தனை நாள் இருந்த தடங்கள் விலகி வெற்றியை கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு இந்த காலம் அருமையான வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்தப்படி நல்ல திருமண வரன் அமையும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் கொடுக்க போகிறது. நீண்ட நாட்களாக சந்தித்த மன கசப்புகளும் கவலைகளும் விலகுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |