கொல்லிமலையில் கொல்லிப்பாவை அருள் இறங்கி பேசிய அதிசயம்
கொல்லிமலை என்றால் நம் எல்லோருக்கும் பல மர்மமான ஆன்மீக சார்ந்த விஷயங்கள் நினைவுக்கு வருவதை நாம் கவனிக்க முடிகிறது. அப்படியாக கொல்லிமலையில் எட்டுக்கை அம்மன் என்ற ஒரு திருக்கோயில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக இருக்கிறது.
இக்கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அவர்களுடைய வேண்டுதல்களை வைக்கிறார்கள். ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விசேஷங்கள் இருக்கும். அப்படியாக இங்கு எட்டுகை அம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்யும்பொழுது அவர்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற அவர்கள் விசித்திரமான சில காணிக்கைகளை செலுத்துகிறார்கள்.
அதேபோல் வேண்டுதல் நிறைவேறினாலும் அவர்கள் வித்தியாசமான ஒரு காணிக்கை செலுத்தி அவர்களுடைய பக்தியை செலுத்துகிறார்கள். மேலும், இங்கு வந்த நிறைய பக்தர்கள் நம்மிடம் சொல்வதாவது, நியாயமான கோரிக்கைகளை அம்மன் கட்டாயமாக நிறைவேற்றிக் கொடுப்பார் என்ற ஒரு தீர்க்கமான நம்பிக்கையை கொடுக்கிறார்கள்.
அப்படியாக எட்டுகை அம்மன் கோவில்களில் நடைபெறக்கூடிய பூஜைகள் மற்றும் வித்தியாசமான சடங்குகளை பற்றி நம் ஐபிசியிடம் பக்தர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.