வேண்டிய கோரிக்கை நிறைவேற விநாயகர் வழிபாடு
எந்த ஒரு தெய்வ வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமாக திகழக்கூடிய ஒரு திதி என்றால் அது சதுர்த்தி திரி தான்.
அதிலும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம்.
அன்றைய தினம் விநாயகப் பெருமானை வழிபாட்டு கோரிக்கையை வைத்தால் அவர் விரைவிலேயே அதை நிறைவேற்றுவார்.
விநாயகர் வழிபாடு
இந்த ஆண்டு மஹாசங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 22ஆம் திகதி வியாழக்கிழமை வருகிறது. அன்று மாலை 6:15க்கு மேல் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் நம்முடைய வீட்டில் உள்ள விநாயகர் சிலைக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன் போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன் பின் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்தி பூ வைக்கலாம். மேலும், மஞ்சள் நிற பூக்களால் விநாயகரை அலங்காரம் செய்யலாம்.
விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம்.
பின்னர் விநாயகப் பெருமானுக்கு உரிய விநாயகர் அகவலை முழு மனதோடு பாராயணம் செய்ய வேண்டும்.
இப்படி செய்து முடித்த பிறகு கையில் ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு லட்சுமி கணபதி மந்திரத்தை கூற வேண்டும்.
பின் கோரிக்கையை விநாயகப் பெருமானிடம் கூறிவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அப்படியே விநாயகரின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.
நம்முடைய கோரிக்கை நிறைவேறியதும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலய உண்டியலில் சேர்த்து விட்டு விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.
லட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வர வரத சர்வ தனம்மே வசமானய ஸ்வாஹா
இந்த மந்திரத்தை 5, 7 என்ற எண்ணிக்கையில் தினமும் கூறி விநாயக பெருமானை வழிபட்டால் நம்முடைய அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |