ஆண்கள் மட்டும் பங்கேற்ற கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழா
தமிழ்நாட்டில் குலதெய்வங்கள் வாழிபாட்டிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யப்படுகிறது.அப்படியாக கிராமப்புற தெய்வங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று மக்களுக்கு தீர்ப்பு வழங்கி அருள்பாலித்து வருபவர் கருப்பண்ணசுவாமி.
அவர் நிதி கடவுளாக கிராமங்களில் மக்களால் வணங்க படுகிறார். அந்த வகையில் வத்தலகுண்டு தருமத்துப்பட்டி கோட்டை என்னும் ஊரில் உள்ள கருப்பண்ணசுவாமி கோயிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆனால் அங்கு சற்று வித்யாசமாக பெண்கள் பங்கு பெறாமல் ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் பங்கேற்று சிறப்பித்திருக்கின்றனர்.கிராமப்புற கோயில்களில் பொதுவாக வேண்டுதல் வைத்து ஆடுகள் பலிகொடுப்பது என்ற விஷேசம் இருந்து வருகிறது.
அந்த வகையில் தருமத்துப்பட்டி கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் இரவில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு விடியும் வரை கெடா விருந்து நடைபெற்றது.பிறகு கோயில் முதன்மையானவர்கள் சுவாமிக்கு பொங்கல் வைத்து படைத்தது பூஜைகள் செய்து விழா நடந்தது.
மேலும் இரவில் சுவாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி விழாவில் மிக எதிர்பார்ப்போடு நடைபெறும்.அந்த வகையில் கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் இரவு சுவாமி வேட்டைக்கு சென்று ஆகாய பூஜை நடைபெற்றது.
பிறகு பச்ச அரிசியில் சாதம் உருண்டையோடு கறிவிருந்து பரிமாறப்பட்டது.இரவில் விடாது பெய்த மழையும் பக்தர்கள் பொருட்படுத்தாமல் வழிபாட்டில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கறி விருந்தில் விருவீடு,உசிலம்பட்டி ஊர்களில் இருந்து ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |