மனித எலும்புகளை கடித்து சாமி ஆடிய பூசாரி-மாசாணி அம்மன் மயானக்கொள்ளை விழா
அம்மன்களில் மாசாணி அம்மன் மிகவும் உக்கிரமான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆகும்.அந்த அம்மனை மனதில் நினைத்து என்ன வேண்டுதல் வைத்தாலும் அம்மனின் அருளால் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அப்படியாக மகாசிவராத்திரி அடுத்து கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்த வருடமும் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.அதாவது சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தின் முன்பு மேளதாளம் முழங்க நள்ளிரவு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன.
இவ்வளவு சக்தி வாய்ந்த மயானப் பூஜையில் கோவில் பூசாரி ஒருவர் கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மாசாணியம்மனின் களிமண் உருவத்தைச் சுற்றி ஆக்ரோசமாக நடனமாடினார்.அதை தொடர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட மாசாணி அம்மன் சிலையின் இதயத்திலிருந்து கைபிடி மண்ணை எடுத்தும், அதிலிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடியும் நடனமாடினார்.
இங்கு இருந்து எடுத்த இந்த களிமண்ணை சொக்கம்புதூரில் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்குக் கொண்டு சென்று, அங்கு அந்த மண்ணை வைத்து பூஜை செய்யப்பட்டது.நள்ளிரவில் இவ்வளவு ஆக்ரோஷமாக நடைபெறும்.
இந்த விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் அவர்கள் குடும்பத்தில் உண்டான கஷ்டங்கள்,எதிரிகள் தொல்லை அவர்களை சூழ்ந்த கெட்ட நேரம் எல்லாம் விலகிவிடும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை.
இந்த நிகழ்ச்சியில் கோவை மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |