கோயிலுக்கு சென்றால் இனி இந்த தவறை செய்ய வேண்டாம்
இறைவன் அவன் இருக்கும் இடத்தில் தான் எல்லாமும் நிறைந்து இருக்கிறது .நாம் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க வேண்டும் என்று நினைப்பதே பாக்கியம் என்றால்,அங்கு சென்று இறைவனை தரிசித்து வர எத்தனை புண்ணியங்கள் சேரும்.
கோயிலுக்கு சென்று வருவது என்பது நம் வீட்டில் பல நாள் தேங்கி இருந்த தூசிகளை சுத்தமாக்குவதற்கு சமம்.அதாவது கோயிலுக்கு செல்ல நம் மனதில் தேங்கி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மன அழுக்குகள் எல்லாம் கரைந்து போகும்.
இறைவன் ஒளி பட்டாலே போதும் வாழ்க்கை மேம்படும். அப்படியாக நாம் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் யாரையும் எதிர்ப்பார்க்க கூட வேண்டும்.உடன் யாரேனும் வந்தால் அழைத்து செல்லலாம் இல்லை கூப்பிட்டு வரவில்லை என்றால் மனதில் அதுவே சில சங்கடங்கள் ஏற்படுத்திவிடும்.
ஆதலால் எந்த வித சங்கடங்கள் இல்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் ஆசையோடும் ஆவலோடும் அவனை தரிசிக்க செல்ல வேண்டும்.
மேலும்,கோயிலுக்கு சென்ற உடன் அமைதியில் மூழ்கி இறைவனும் நானும் என்றான பக்தியில் கலந்து தரிசனம் செய்ய வேண்டும். அவன் சந்நிதிகளை ரசிக்க வேண்டும், உணர வேண்டும்.
எத்தனை பிறப்பெடுத்தேனோ ?உன்னை எத்தனை முறை இதற்கு முன்னாள் தரிசனம் செய்தேனோ?ஆனால் இந்த பிறவியிலும் உன்னை வணங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதே? அதற்கு நன்றி என்று சொல்லியபடி அவனை சந்நிதியை வலம் வர வேண்டும்.
கோயிலில் அனைவரும் ஆவலுடன் காத்து கிடப்பது மூலவர் தரிசனம் தான்.அங்கு செல்ல இறைவன் அருகிலே செல்வது போல் ஓர் உணர்வு வரும் .அப்படியாக நின்று அவனை தரிசிப்பதை தவிர்த்து வேறு என்ன வேண்டும் என்பது போல் அங்கு இறைவன் அழகாய் வீற்றியிருப்பர்.
மூலவரை தரிசனம் செய்து வெளியே வர அவனை கண்ட காட்சியும் அவன் அருளும் மனதில் இருந்து நீங்காமல் இருக்கும்,ஆதலால் இறைவனை தரிசித்த பிறகு கோயிலில் சற்று அமர்ந்து.அவனின் அழகையும் கண்ட காட்சியும் நிதானமாக அவனை முழுமையாக உணர்ந்த பிறகே புறப்படவேண்டும்.
மேலும் நாம் அப்படி செய்ய நாம் எதற்காக கோயிலுக்கு சென்றோமோ அதற்கான விடையை இறைவன் நமக்கு தருவார். அதை உணர சற்று அவன் சன்னதியில் உட்கார்ந்து எழும்புவது நன்மையை தரும்.
ஆதலால் பரபரப்பாக கோயிலுக்கு செல்லாமல் நிதனமாக ஒவ்வொரு நொடியையும் அவனுக்காக நமக்காக நேரம் செல்வவிட்டு அருள் பெற்று வரவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |