எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் இந்த 3 விஷயம் மட்டும் செய்யாதீர்கள்
இந்த உலகத்தில் கிருஷ்ண பகவான் நமக்கு ஆசிரியராகவும், நண்பனாகவும், தாய் தந்தையாகவும் காக்க வேண்டிய இடத்தில் இறைவனாகவும் இருந்து காப்பாற்றி வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
அப்படியாக பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதையில் நமக்கு வாழ்க்கை பாடம் முழுவதும் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், கிருஷ்ண பகவான் நமக்கு வாழ்க்கையில் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும்? எப்பொழுது மௌனமாக இருக்க வேண்டும்? என்பதை பற்றி சொல்லியிருக்கிறார் அதை பற்றி பார்ப்போம்.
1. நமக்கு எவ்வளவுதான் அன்பானவர்களாக நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக நாம் அறிவுரை சொல்கின்ற பொழுது அவர்கள் நம்மை விடுவார்கள். எப்பொழுது எதை சொல்ல வேண்டும் எப்பொழுதே எந்த அளவிற்கு சொல்ல வேண்டும் என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
2. இன்றைய காலகட்டங்களில் பலரும் பார்ப்பவர்களிடம் ஆலோசனையும், அறிவுரை கூறுவது உண்டு. ஆனால் கேட்பவர்களுக்கு மட்டும் நம் அறிவுரை கூற வேண்டும். கேட்காதவர்களுக்கு அமைதியே சிறந்த பதிலாக இருக்கும்.

3. இந்த உலகத்தில் உண்மையை நம்பக் கூடியவர்கள், பின்பற்றக் கூடியவர்களுக்கு நல்ல வார்த்தைகள் விதையாக மாறும். ஆனால், உண்மையாக இல்லாதவர்களிடம் சொல்ல கூடிய ஒவ்வொரு தர்மமான விஷயங்களும் அவர்களுக்கு சுமையாகவே மாறும்.
அதனால் நம்மை சுற்றி எத்தனை நபர்கள் இருந்தாலும் எத்தனை நெருக்கமான நபர்கள் இருந்தாலும் எப்பொழுது நாம் அவர்களிடம் பேச வேண்டும் எப்பொழுது மௌனமாக இருக்க வேண்டும் என்று அறிந்து செயல்படுபவர்களை சிறந்த ஞானி என்கிறார் கிருஷ்ண பகவான்.