நாளை(26.08.2024)கிருஷ்ண ஜெயந்தி வீட்டில் கொண்டாடும் முறை என்ன?

By Sakthi Raj Aug 25, 2024 07:00 AM GMT
Report

பல அசுரர்களை அழிக்கவும், மகாபாரத யுத்தத்தின் மூலம் உலகிற்கு எந்த நிலை வந்தாலும்,இறுதியில் தர்மம் தான் எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தக் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.

அப்படியாக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.அன்று தான் உலகம் எங்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இப்பொழுது நாம் நாளை(26.08.2024)வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி எப்படி கொண்டாடுவது என்று பார்ப்போம். அனைவரும் வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜை செய்து திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும்.

நாளை(26.08.2024)கிருஷ்ண ஜெயந்தி வீட்டில் கொண்டாடும் முறை என்ன? | Krishna Jeyanthi Celebration

இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது அதாவது (ஒரு நாளிகை 24 நிமிடம்) ஒன்னரை மணி நேரமாவது விரதம் இருப்பது நல்லது. இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி, நல்லருள் சேரும். குடும்பத்தில் குறையாத செல்வங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

மேலும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபடுவது என்பது விஷேசம்.வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பாதம் வைத்து பாதம் வைப்பார்கள் இல்லை என்றால் நாமே வீட்டில் பாதம் வரையலாம்.

அடுத்தபடியாக கிருஷ்ணர் பிறந்த போது மூன்று நபர்கள் மட்டும் விழித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான். இதனால் கிருஷ்ண ஜெய்ந்தி வழிபாடு, பூஜை சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை நேரத்தில் செய்வது சிறந்தது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?சாப்பிடக்கூடாது ?

கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?சாப்பிடக்கூடாது ?


அதிகாலையில் குளித்துவிட்டு நாம் விரத சடங்குகளைத் தொடங்க வேண்டும் கிருஷ்ண பூஜைக்காக ஒரு பலகையில் சிவப்பு நிற துணியை விரித்து பிறகு அந்த பீடத்தில் பகவான் கிருஷ்ணரின் சிலை அல்லது புகைப்படத்தை வைக்க வேண்டும்.

  பூஜை தொடங்குவதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மீது சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காயைக் கலசம் போல வைக்கவும்.

நாளை(26.08.2024)கிருஷ்ண ஜெயந்தி வீட்டில் கொண்டாடும் முறை என்ன? | Krishna Jeyanthi Celebration

கலசத்தின் வலது புறம் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைக்கவும். பின்னர் அந்த கலசத்திற்கும் பிள்ளையாருக்கும் திலகம் இடவும், பூக்கள், மாலைகள் இடவும்.பிறகு நெய் விளக்கேற்றி அதன் முன் பூஜை பொருட்களைவைத்து பிள்ளையாரையும், கிருஷ்ணரையும் வணங்கி பூஜையை தொடங்கலாம்.

பூஜை தொடங்கும் முன் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம்.முடிந்தால் கிருஷ்ணருக்கு மஞ்சள் ஆடை அணிவிக்கவும்.

இல்லையெனில், உங்களிடம் உள்ள சுத்தமான துணியையும் அணிவித்து, அலங்காரம் செய்யுங்கள்.கிருஷ்ணரின் அலங்காரம் முடிந்ததும் தீப, தூபத்தைக் காட்டுங்கள். பிறகு வெளியில் சென்று சூரியனை வணங்குங்கள்.

நாளை(26.08.2024)கிருஷ்ண ஜெயந்தி வீட்டில் கொண்டாடும் முறை என்ன? | Krishna Jeyanthi Celebration

பூஜைக்கு எது இருக்கிறதோ இல்லையோ, துளசி இலையை வைத்திருப்பது அவசியம்.கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், துளசி, சீடை, முருக்கு அல்லது உங்களால் செய்ய முடிந்த இனிப்பு வகைகளும், நாவல் பழங்கள், விளாம்பழம் உள்ளிட்டவற்றைவைத்து பூஜையை தொடங்கலாம்.

பூஜை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் வைத்து வணங்கவும். உங்களால் எந்த பலகாரமும் செய்ய முடியாவிட்டாலும் குறைந்தது சிறிது வெண்ணெய்யும், அவல் வைத்தல் நல்லது.

பூஜை முடிந்த பின்னர் கிருஷ்ணருக்கு முன் வைத்திருந்த கலசத்தை வலது புறமாக நகற்றி வைத்து, கிருஷ்ணருக்கு படைத்த நைவேத்திய பலகாரங்களை, பூஜைக்கு வந்திருப்பவர்களுக்கும், அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பின்னர் நீங்களும் எடுத்து சுவைக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் இவ்வாறு வீட்டில் செய்து வழிபடுவதால் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US