நாளை (16-08-2025) கிருஷ்ணரின் அருளைப்பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்
விஷ்ணு பகவானின் தசாவதாரங்களில் எட்டாவது அவதாரமாக பூமியில் உதித்து பல லீலைகள் செய்தவர்தான் கிருஷ்ணர். கிருஷ்ணரை வழிபாடு செய்வதற்கு அவனுடைய அருள் கட்டாயம் தேவை. எவர் ஒருவர் வாழ்க்கையில் தர்மத்தை கடைப்பிடித்து நல்வழியில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்களோ அவர்களாலே கிருஷ்ணனை எளிதில் நெருங்க முடிகிறது.
கிருஷ்ண பகவான் தர்மத்தின் தலைவன். அவனை சரண் அடைந்து விட்டால் நம் வாழ்க்கையை பற்றி கவலைகள் கொள்ள வேண்டாம். தீராத துன்பத்தில் உதவ மனிதர்கள் வராமல் இருக்கலாம் ஆனால் கடைசி நொடியில் மாறுதலை கொடுத்து காப்பாற்ற கிருஷ்ணர் கட்டாயம் வருவார்.
கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது நம் மனம் நேர்மறையான சிந்தனைகள் பெறுவதை பார்க்கலாம். அதாவது இதுதான் வாழ்க்கை இதுதான் நடைமுறை என்று கிருஷ்ண பகவானை போல் ஒரு மனிதனுக்கு வாழ்க்கை பாடத்தை போதிக்க எவராலும் கட்டாயம் முடியாது.
இவ்வளவு அற்புதமான கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வதற்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படியாக நாளை கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனுடைய அருளை பெறுவதற்கு நாம் சில மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யலாம். விஷ்ணு பகவானுக்கு எல்லோரும் ஒன்று தான்.
எவரொருவர் தன் மனதில் நீங்காது "கிருஷ்ணா கிருஷ்ணா" என்று சொல்கிறார்களோ அவர்களை கட்டாயம் கிருஷ்ண பகவான் கைவிடுவதில்லை. அதோடு கிருஷ்ண பகவானை நெருங்க சில மந்திரங்கள் சொல்லி நம் வழிபடுவதன் மூலம் எல்லையற்ற பலன்களை பெறலாம்.
அந்த வகையில் நாளை (16-08-2025) கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ண பகவானுடைய அருளை பெற நாம் சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்
கிருஷ்ண மந்திரங்கள் :
1. ஓம் நமோ பகவதே வாசுதேவாய
2. ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ
3. கிருஷ்ணாய வாசுதேவாய ஹராய பத்மனேபிரணதாய க்லேஷ்ணாய கோவிந்தாய நமோ நமஹ
4. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
5. ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸாவாய
கோவிந்தாய நமோ நமஹ நமோ
விக்ஞான ரூபாய, பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய, கோவிந்தாய நமோ நமஹ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.







