கர்ம வினைகளை தீர்க்கும் வற்றாத அதிசய நந்தி தீர்த்தம்- எங்கு தெரியுமா?
மனிதர்கள் முற்பிறவியலும் இந்த பிறவியிலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களால் ஏற்படுகின்ற தோஷமும் ஏற்படுகின்ற தடங்களும் நிகழ் வாழ்க்கையை பலவகையில் பாதிக்ககூடும். அந்த பாதிப்புகள் இருந்து விடுபடுவதற்காக நாம் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்வது வழக்கம்.
அப்படியாக நாம் சந்திக்கக்கூடிய தோஷங்களும் கர்மவினைகளும் விலக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் அருகில் 24 மணி நேரமும் வற்றாத அதிசய தீர்த்தத்தில் நீராடினால் எல்லா தோஷமும் விலகும் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
பலரும் அறிந்திடாத கிருஷ்ணகிரியில் இருக்கக்கூடிய இந்த அதிசய தீர்த்த பகுதியில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருக்கிறது. இங்கு சிவபெருமான் லிங்கமாகவும் லிங்கத்திற்கு ருத்ர அவதாரமாகவும் காட்சியளிக்கிறார். நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் தான் மார்க்கண்டேஸ்வரரை நாம் தரிசனம் செய்ய முடியும்.
அதில் ஒன்றுதான் இந்த ஆலயம். இந்த கோவிலின் உடைய தல வரலாறு திருக்கடையூரில் உள்ளது. அதேபோல், மார்கண்டேஸ்வரருக்கு மோட்சம் அளித்த இடம் இந்த கிருஷ்ணகிரியில் உள்ள மார்க்கண்டேஸ்வரர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் என்பது சாட்சியாக கல்வெட்டுகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்க்கண்டே என்ற தென்பெண்ணை ஆற்றின் தீர்த்தம் தான் சுயம்பு லிங்கத்தை தழுவி நந்தி தீர்த்தமாக வருகிறது. இந்த தீர்த்தத்திற்கு நந்தி தீர்த்தம் மற்றும் மாட்டு வாய் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இந்த தீர்த்தத்தில் குளிப்பதற்காக பல ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடி மார்கண்டேஸ்வரரை தரிசனம் செய்தால் நமக்கு பாவ விமோசனமும் முன்னோர்களால் ஏற்பட்ட சாபமும் கர்ம வினைகளும் பித்ரு தோஷமும் நிவர்த்தி ஆகும் என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







