2025 கிருஷ்ண ஜெயந்தி: ஏன் வீடுகளில் கிருஷ்ணரின் பாதம் வரைய வேண்டும்?
கலியுகத்தில் கிருஷ்ண பகவான் அவதரித்த தினத்தையே நாம் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உலகமெங்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கிருஷ்ணரின் பிறந்த நாள் 5752 வது ஆகும்.
இந்த நாளில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் அரிசி மாவால் கிருஷ்ணரின் பாதங்களை வரைவோம் அல்லது குழந்தைகளின் கால் தடத்தை பதித்து நம் கிருஷ்ண பகவானை வரவேற்போம்.
இவ்வாறு கிருஷ்ண பகவானுடைய கால்களை நம் வீடுகளில் வரைவதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் தெரியுமா? அதைப் பற்றி பார்ப்போம்.
கிருஷ்ண பகவான் இந்த உலகத்தில் பல லீலைகளையும் குறும்புகளையும் செய்த அற்புதமான குழந்தையாவார். மேலும் நாளைய தினம் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை உள்ளது.
காரணம் கிருஷ்ண பகவான் நள்ளிரவு 12 மணிக்கு பூமியில் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. அதனால் நாளை கிருஷ்ண பகவான் உடைய பாதங்களை வீடுகளில் வரைவதால் நம் வீடுகளுக்கு கிருஷ்ண பகவான் வருவதாக ஐதீகம்.
அப்படியாக கிருஷ்ணர் வீட்டிற்கு வருகை தரும் பொழுது வீடுகளில் நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் வீடுகளில் கட்டாயம் கண்ணன் போல் குழந்தை பிறக்கும். கஷ்டங்கள் ஏதேனும் சூழ்ந்து இருந்தால் கஷ்டங்கள் விலகி கண்ணன் அருளால் மகிழ்ச்சி பெருகும்.
அதர்மம் தலை தூக்கி உங்கள் தர்மம் போராடுகின்றது என்றால் கண்ணன் வருகை தந்து உங்களுடைய தர்மத்தை நிலை நாட்டுவர்.
ஆக கிருஷ்ண பகவானுடைய பாதங்கள் வரைந்து நாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் பொழுது நமக்கு கிருஷ்ணரின் அருளால் பல்வேறு நன்மைகள் நடகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







