வெள்ளி துப்பாக்கி மற்றும் வெள்ளி பூண்டு காணிக்கை செலுத்திய பக்தர்- எங்கு தெரியுமா?
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சவாரியா சேத் கோவில் உள்ளது. இங்கு உள்ள கிருஷ்ணர் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார். இந்த கோயிலில் மூலவராக வீற்றியிருக்கும் கிருஷ்ணருக்கு பக்தர் ஒருவர் வெள்ளியில் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பூண்டு காணிக்கையாக செலுத்தியது பலரையும் ஈர்த்து உள்ளது.
இந்த இரண்டு காணிக்கையும் சுமார் அரைக்கிலோ எடைக் கொண்டு உள்ளது. மேலும், இறைவனுக்கு ஆயுதங்களை காணிக்கையாக செலுத்துவது இதுவே முதன் முறை என்று கோயில் தலைவர் கூறுகிறார். கடந்து ஆண்டு ராஜஸ்தானில் பூண்டின் விலை மிக கடுமையான ஏற்றத்தை சந்தித்தது.
இதனால், பூண்டு பயிர் செய்த விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டினர். அதன் காரணமாக அந்த பக்தர் சுவாமிக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டு மற்றும் துப்பாகியை காணிக்கை செலுத்தி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதோடு, இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கமாம். கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







