குரோதி தமிழ் புத்தாண்டு: ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க என்ன செய்வது?

By Fathima Apr 14, 2024 01:36 AM GMT
Report

சித்திரையின் முதல் நாளான இன்று குரோதி தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், தமிழ் வருடப்பிறப்பை உற்சாகமுடன் கொண்டாடுவார்கள்.

இன்றைய நாளில் சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழைவார், இன்று ஞாயிற்றுக்கிழமை, முருகனுக்கு உரிய வளர்பிறை சஷ்டி, பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் என தெய்வீக தன்மைகள் நிறைந்த நாளில் குரோதி ஆண்டு பிறந்துள்ளது.

இன்று பூஜை செய்வதற்கு நல்ல நேரம் காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை ஆகும்.

குரோதி தமிழ் புத்தாண்டு: ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க என்ன செய்வது? | Krothi Tamil New Year 2024 Rituals

இன்றைய நாளில் உங்களது குலதெய்வத்தை வணங்குவது சிறப்பானதாகும், வீட்டு கிரகப்பிரவேசம், புதிய தொழில் என சுபகாரியங்களை தொடங்குவதற்கும் ஏற்ற நாள் இதுவாகும்.

வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடன் தேவையில்லாத செலவுகள் இல்லாமல் குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்க வேண்டிக்கொள்வார்கள்.

அருகில் உள்ள கோயிலுக்கு சென்று சிறப்பான பூஜைகளில் பங்கேற்ற நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாள் முழுதும் தெய்வீகம் நிறைந்ததாக மாற்றிக்கொள்ளுங்கள்.

தமிழ் புத்தாண்டின் கனி காணுதல் முறை

தமிழ் புத்தாண்டின் கனி காணுதல் முறை


பெண்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலமிட்டுக் கொள்ளுங்கள், இது நேர்மறை சக்தியை அதிகரிக்கும், செல்வத்தை வரவேற்கும் விதமாகவும் இருக்கும்.

பாரம்பரிய உடைகளுடன் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள், அறுசுவை உணவுகளுடன் தெய்வத்துக்கு படையல் வைக்கவும்.

பழங்கள், இனிப்பு, மஞ்சள், என மங்களகரமான பொருட்களுடன் தெய்வத்தை வழிபடுங்கள்.

சித்திரை 2024: விசேஷ நாட்கள் மற்றும் சுபமூகூர்த்த நாட்கள்

சித்திரை 2024: விசேஷ நாட்கள் மற்றும் சுபமூகூர்த்த நாட்கள்


பஞ்சாங்கம் படிக்கத் தெரிந்தர்கள் படிக்கலாம், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குரோதி தமிழ் புத்தாண்டு: ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க என்ன செய்வது? | Krothi Tamil New Year 2024 Rituals

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US