கடுமையான பரம்பரை தோஷம் விலக செய்யவேண்டிய பரிகாரம்
ஒரு மனிதனுக்கு காலம் போல் நல்ல பாடம் கற்று கொடுக்க எவராலும் முடியாது.அதாவது அந்த காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை நமக்கு ஏதேனும் சங்கடம் நிகழும் பொழுதே உணர்ந்து கொள்ள முடியும்.அப்படியாக சிலரது குடும்பத்தில் பரம்பரையாக சில தோஷங்கள் பின் தொடர்ந்து கொண்டு இருக்கும்.
அதை அவர்கள் கவனிக்காமல் விட்டு இருப்பார்கள்.பிறகு வீட்டில் காலம் கடந்து கஷ்டமான சூழ்நிலையில் தான் அவர்களுக்கு அந்த தோஷம் பற்றிய விழிப்புணர்வு வரும்.அவ்வாறு ஒரு குடும்பத்திற்கு தோஷம் ஏற்பட அதை எவ்வாறு சரி செய்வது?நடக்கும் தடங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று பார்ப்போம்.
பொதுவாக பரம்பரை தோஷம் என்பது பெரும்பாலும் அந்த வீட்டில் உள்ள பெண்பிள்ளைகளை அதிகம் பாதிக்கும்.வெகு சில குடும்பத்தில் ஆண்களை பாதிக்கும்.அவ்வாறு தோஷத்தால் பெண் பிள்ளைகள் பாதிக்க படும் வேளையில் அவர்கள் கட்டாயம் சரண் அடையவேண்டிய தெய்வமாக கன்னி தெய்வம் இருக்கிறது.
கன்னி தெய்வத்தை முறையாக வழிபாடு செய்து பூஜைகள் செய்து வர அந்த கன்னி தெய்வத்தின் அருளால் அந்த வீட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
அதே போல் ஆண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட அவர்கள் கட்டாயம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று அங்கு வருடாவருடம் ஒரு முறையாவது பொங்கல் வைத்து குலதெய்வத்தை வழிபாடு செய்யவேண்டும்.முடிந்தால் குடும்ப ஆண்கள் மூன்று வருடம் ஒருமுறையாவது மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டால் அவர்களுக்கு உண்டான தோஷம் முற்றிலுமாக விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |