குல தெய்வம் தெரியாதவர்கள் யாரை வணங்கலாம்?
குல தெய்வ வழிபாடு என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். ஒருவர் வீட்டில் குல தெய்வம் என்பது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் போல்.
ஒரு காரியம் தொடங்க வேண்டும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் சந்தேகம் மற்றும் தடை என்றால், குல தெய்வம் கோயிலுக்கு சென்று வர அவர்கள் மன குழப்பம் விலகி காரியம் உடனே நடந்தேறும்.
நம்மை நம் வம்சத்தை காக்கும் தெய்வம் தான் குல தெய்வம். ஆனால், சிலர் இன்று பணி காரணமாக வெளியூர் சென்று வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு தன் குல தெய்வம் யார் என்று தெரியாமல் போக வாய்ப்புஉள்ளது. திடீர் என்று வீட்டில் பிரச்சனைகள் வந்தாலோ, யாருக்கும் திடீர் உடல் நல குறைவு ஏற்படும் போது தான் குல தெய்வத்தை தேடுகின்றனர்.
அப்பொழுது, அவர்கள் வணக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது.
கும்பகோணம் குத்தாலம் அருகே 3 கி மீ கதிராமங்கலம் என்ற ஊரில் அகத்தியர் பூஜித்த 'வனதுர்கையை 'தரிசனம் செய்யலாம்.
இந்த துர்கையை" கதிர் வேய்ந்த மங்கலம் "என கம்பர் குறிப்பிடுகிறார்.
அதாவது கதிரவனின் கதிர்கள் அம்மன் மீது படுவதால் துர்கை அம்மன் சக்தி வாய்ந்தவள் என்கின்றார்.
மேலும் இந்த அம்மனை ஞாயிறு ,செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தரிசிப்பது சிறந்தது .
ஆகையால் குலதெய்வம் தெரியவில்லை என்று கவலை கொள்ளாமல் வனதுர்கையை வழிபட்டு பரிபூர்ண அருள் பெறுவோம்.