குலதெய்வத்தின் முழு அருளை பெற இந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுங்கள்
குலதெய்வம் அருள் என்பது நம்முடைய தாய் தந்தை அன்புக்கு இணையானது.ஒரு மனிதன் எந்த ஒரு செயல் செய்யவேண்டும் என்றாலும் குலதெய்வத்தின் அருள் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் அவன் செய்யும் காரியங்களில் வெற்றி பெறலாம்.
அந்த வகையில் நாம் குலதெய்வம் முழு அருளை பெற எந்த எண்ணையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம் என்று பார்க்கலாம். நாம் எந்த ஊரில் இருந்தாலும் வருடம் ஒருமுறையாவது குலதெய்வத்தை வந்து தரிசனம் செய்து விடவேண்டும்.
வெளிநாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்தில் குலதெய்வம் படம் வைத்து முறையாக வழிபடவேண்டும்.அப்பொழுது தான் வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை அடைய முடியும்.நம் குடும்பமும் குலதெய்வத்தின் அருளால் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள்.
குலதெய்வத்தை வணங்க சரியான நாளாக அமாவாசை, பெளர்ணமி உள்ளது.அன்றைய தினத்தில் வழிபாடு செய்ய நமக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். அதே போல் முடிந்த அளவு நாம் குலதெய்வத்திற்கு திருப்பணிகளை செய்யலாம்.
அது நமக்கு மிக சிறந்த பலனை கொடுக்கும்.சிலர் விசேஷமான நாளில் குலதெய்வத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்.அப்படியாக குலதெய்வத்திற்கு ஏற்ற எண்ணெயாக இலுப்பை எண்ணெய் உள்ளது.
குலதெய்வம் மட்டுமல்ல, அனைத்து கடவுள்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை இந்த இலுப்பை எண்ணெய்க்கு உண்டு.அதுமட்டுமல்ல, இந்த இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால், ஆயிரம் நெய் தீபம் ஏற்றுவதற்கு சமம் என்கிறார்கள்.
குலதெய்வம் கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெய்யில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் உண்டான கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |