குலதெய்வத்தை வசியம் செய்யும் பொருள்
குலதெய்வத்தை முறையாக நாம் வழிபடுவதன் மூலம் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். குலதெய்வத்தின் அருளை நாம் பெற்றோம் என்றால் நம் வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது.
மற்ற பிற தெய்வங்களின் அருள் ஆசியையும் நம்மால் எளிதில் பெற முடியும். அப்படிப்பட்ட குலதெய்வத்தை ஆண் குலதெய்வம் பெண் குலதெய்வம் என்று பிரிப்போம்.
ஆண் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை நாட்களில் வழிபடுவதும், பெண் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் பௌர்ணமி நாட்களில் வழிபடுவதும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.
மாதம்தோறும் இந்த நாளில் சென்று நம்முடைய குல தெய்வத்தை நாம் வழிபட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும்.
குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
நாம் அனைவரும் கண்டிப்பாக முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதற்காக குலதெய்வ கோவிலுக்கு செல்வோம்.
அங்கு செல்லும் பொழுது நம்மால் இயன்ற அளவு குலதெய்வத்திற்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும்.
அடுத்ததாக அலங்காரம் செய்வதற்காக பன்னீர் ரோஜா மாலை, பெண் தெய்வங்களாக இருக்கும் பட்சத்தில் புடவை, ஆண் தெய்வங்களாக இருக்கும் பட்சத்தில் வேஷ்டி துண்டு இப்படி அவர்களை அலங்காரம் செய்வதற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும்.
இதோடு மிகவும் வாசனை மிகுந்த அத்தரை வாங்கி தர வேண்டும். அலங்காரம் அனைத்தும் நிறைவு செய்த பிறகு அத்தரை அங்கு இருக்கும் அர்ச்சகர் இடம் கொடுத்து குலதெய்வத்தின் மேல் பூச சொல்ல வேண்டும். நாமும் அத்தரை பூசிக்கொள்ள வேண்டும்.
இப்படி வாசனை மிகுந்த அத்தரை குலதெய்வத்திற்கு நாம் பூச தருவதன் மூலம் குலதெய்வம் மனமகிழ்ந்து நம் உடனே பின்தொடர்ந்து நம் வீட்டிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
நறுமணம் மிகுந்த பொருட்கள் அனைத்திலும் தெய்வத்தின் அம்சம் பொருந்தி இருக்கும் என்ற கூற்றுக்கிணங்க இப்படி வாசனை மிகுந்த அத்தரை வாங்கித் தருவதன் மூலம் குலதெய்வம் நம் வசமாகும் என்று கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |