சுப காரிய தடை விலக குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் நம்முடைய குலம் காக்கும் தெய்வம். நம்முடைய கோயில் எந்த ஊரில் இருந்தாலும் சரி பௌர்ணமி நாளில் அன்று சென்று நம் குலதெய்வத்தை வழிபட நினைத்த காரியம் உடனே நிறைவேறும் வெறும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஏற்ப அந்த குலதெய்வங்களை வழிபாடு செய்வார்கள். உதாரணமாக சில குல தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சுவாமியை வழிபாடு செய்வார்கள்.
சிலர் கெடா வெட்டி அந்த சுவாமிக்கு வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக எந்த குலதெய்வம் வழிமுறைகள் நீங்கள் கடைபிடிக்கிறீர்களோ அந்த வழிபாட்டு முறைப்படி நாம் தவறாமல் குலதெய்வத்தை பௌர்ணமி நாளன்று நம் தரிசித்து வர நம் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி உண்டாகும்.
ஒருவருடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் வேட்டி வஸ்திரம் வாங்கி செலுத்தி தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டால் .
அந்த திருமணம் முடிந்து மாங்கல்யம் வாங்கி குலதெய்வ கோவிலுக்கு சாத்துவதாக பிரார்த்தனை செய்து கொண்டாரல் நிச்சயம் வீட்டில் இருக்கும் திருமண தடை விலகும் என்பது நம்பிக்கை.
தங்கத்தால் தான் தாலி வாங்கி செலுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புதுமஞ்சள் கயிறில் மஞ்சள் கொம்பு கட்டி அந்த அம்பாளுக்கு செலுத்தினால் கூட உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |