குழந்தை வரம் அருளும்"தவம் பெற்ற நாயகி"
நீண்ட காலம் குழந்தை இல்லை என்ற கவலை தம்பதியினர் மத்தியில் இன்று இருந்து வருகிறது.
அவர்கள்,பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் குழந்தை பிறப்பதில் தாமதமாகி விடுகிறது.
அப்பொழுது அவர்கள் பல தோஷ நிவர்த்திகள் ,கோவில்களை ,சென்று பரிகாரங்கள் செய்ய தொடங்குவர். ஆனால், இவர்களின் கவலையை நீக்கவே அருள் தருகிறாள் 'தவம் பெற்ற நாயகி'
விருதுநகர் மாவட்டம் தேவதானத்தில் அமைந்திருக்கிறாள் இந்த தவம் பெற்ற நாயகி. இயற்கை வளம் சூழ்ந்த இப்பகுதி கடவுளுக்கு மன்னர்களால் தானம் செய்யப்பட்டதால் தேவதானம் என இது அழைக்கப்படுகிறது.
தல புராணம்
இந்தப் பகுதியை ஆண்டு வந்தவர் வீரபாகு பாண்டிய மன்னர் . இவர் ஒரு மிகுந்த சிவ பக்தர் ஆவார்.
இவருடைய எதிரியான விக்கிரம சோழ மன்னர் இவரை தோற்கடிக்க பலமுறை போர் தொடுத்தும் அவரால் முடியவில்லை.
அதனால், சூழ்ச்சியாக ஒருமுறை பாண்டிய மன்னரை வீழ்த்தி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்,நட்பு பாராட்டும் விதமாக நஞ்சு கலந்த ஆடை ஒன்றை பாண்டிய மன்னருக்கு சோழ மன்னர் பரிசாக அனுப்பினார்.
ஆனால், பாண்டிய மன்னர் சிவ பக்தர் என்பதால் சிவபெருமான் பாண்டிய மன்னர் கனவில் தோன்றி சோழ மன்னர் செய்த சூழ்ச்சியை உணர்த்திட அந்த நஞ்சாடை அணிபவர் எரிந்து சாம்பல் ஆகிவிடுவார் என்று சொல்ல கண்விழித்து கொண்ட பாண்டிய மன்னர் சோழ மன்னர் அனுப்பிய நச்சாடையை கொண்டு வந்த சேவகனுக்கே போற்றிவிட்டார் .சேவகன் எரிந்து சாம்பலானார் .
இங்குள்ள சுவாமிக்கு கோயில் எழுப்பிய பாண்டிய மன்னன் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் என்று பெயர் சூட்டினார்.
இதற்கிடையில் தான் செய்த தவிறினால் பார்வை இழந்த சோழ மன்னன் பாண்டிய மன்னரிடம் வந்து மன்னிப்பு கேட்டு நச்சாடை தவிர்த்த சிவபெருமானை வேண்ட சிவ பெருமான் அவருக்கு ஒரு கண் மீண்டும் பார்வை மட்டும் கிடைக்கும் படிஅருளினார் .
ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை கிடைத்த சோழ மன்னன் மனம் உருகி தன்னுடைய இன்னொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என சிவபெருமானை வணங்கினார்.
அப்பொழுது சிவபெருமான் உனக்கு இன்னொரு கண் பார்வை வேண்டும் என்றால் எனக்கு … இந்த ஊர் அருகே வேண்டும் என்று அசுரரி வாக்காக சொல்ல .அதன்படி சேத்தூர் கோயில் கட்டினான் சோழ மன்னன் பிறகு கண் பார்வை கிடைத்தது
குழந்தை பேறு இல்லாதவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்
பொதுவாக கங்கையில் நீராடினால் நம் பாவங்களை கரையும் என்று சொல்வார்கள.
அப்படியாக மக்கள் செய்யும் பாவங்களை யாவும் தன்னிடம் வந்து சேருகிறது என நினைத்து வருந்திய கங்கை அக்குறையை போக்கிக் கொள்ள பார்வதி தேவியுடன் தவம் செய்து இங்கு விமோசனம் பெற்ற இடம் ஆதலால் இந்த அம்மனுக்கு "தவம் பெற்று நாயகி "என்று திருநாமம் உண்டாயிற்று .
குழந்தை பேறு இல்லாத பெண்கள் தலைக்கு குளித்து ஐந்தாவது நாள் இக்கோவிலுக்கு தம்பதிகளா வந்து ஸ்வாமியை தரிசித்து ,இங்குள்ள மூன்று நாகலிங்க பூவை பறித்து பூஜித்து பின் அதை பால் அல்லது மோரில் கலந்து இரவில் குடிக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கக்ள் நம்புகின்றனர்.