தமிழகத்தில் இன்று 65 கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் இன்று(ஜூலை 12) 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில், திருவள்ளூர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில், பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) ஆகிய கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது.
குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 65 கோவில்களுக்கு குடமுழுக்கு இன்று (12ஆம் திகதி) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும், சென்னை சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவில், சேலம் மாவட்டம் கிருஷ்ணாநகர் சீதாராமச்சந்திர மூர்த்தி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை அமிர்தகடேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மொனசந்தை கரியமாணிக்கப் பெருமாள் கோவிலும் அடங்கும்.
கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோவில்கள், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் முத்து மாரியம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் சேந்தமங்கலம் சுந்தர விநாயகர் கோவில், ஆகியவையிலும் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
வெகு விமரிசையாக நடைபெற்ற 65 கோவில்களின் குடமுழுக்கு விழாவிலும் திராளன பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |