நண்பனுக்காக தேடி சென்று உதவிய கிருஷ்ணர்
கிருஷ்ணரை போல் வாழ்க்கை சுவாரஸ்யத்தை யாராலும் கற்று கொடுக்க முடியாது.உலகின் நன்மை தீமையையும்,மேலும் எவ்வளவு இக்கட்டான சுழலில் உயிர் போகும் நிலை வந்தாலும் ஒருவன் தர்மத்தை கடைபிடித்தால் அந்த தர்மத்தால் கடைசி நொடியிலும் அவன் வாழ்க்கை மாறும் என்பதை போதிக்க அவனை போல் யார் உண்டு.
அப்படியாக கிருஷ்ணர் மஹாபாரதத்தில் அவர் மாதங்களில் நான் மார்கழி என்றார்.அவ்வளவு சிறப்பான மார்கழி மாதத்தில் நாம் கிருஷ்ணரை வழிபாடு செய்ய அவன் அருளால் நாம் வாழ்க்கை வசந்தமாக மாறும். அப்படியாக மார்கழி முதல் புதன்கிழமை கிருஷ்ணர் அவரின் நண்பனான குசேலனுக்கு அவருடைய வறுமையை அவர் கேட்காமலே தீர்த்து வைத்தார்.
அவ்வளவு அற்புதம் நிறைந்த நாள் இந்த மார்கழி மூன்று.அதை பற்றி பார்ப்போம். கிருஷ்ணரும் குசேலரும் ஒன்றாக படித்தவர்கள்.மேலும் அவர்கள் மிக நெருக்கமான நண்பர் என்று நாம் அனைவரும் அறிவோம்.அப்படியாக கிருஷ்ணர் அரசராக இருந்தார்.
ஆனால் அந்த சமயத்தில் குசேலர் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார்.தலைமேல் உயர்ந்த வவறுமை நிலையை சமாளிக்க முடியாமல் தவித்த குசேலர் தன் நண்பனான கிருஷ்ணரை சந்தித்து ஏதேனும் உதவி பெறலாம் என்று எண்ணி செல்கிறார்.
பொதுவாக நாம் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் சந்திக்க செல்லும் பொழுது வெறுங்கையாக செல்லக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அப்படியாக வறுமையில் வாடினாலும் குசேலர் அவரால் முடிந்த அவலை ஒரு கிழிந்த துணியில் கட்டிக்கொண்டு கிருஷ்ணரை பார்க்க செல்கிறார்.
உதவி கேட்டுவிடலாம் என்று சென்ற குசேலருக்கு கிருஷ்ணரை பார்த்தவுடன் தயக்கம் ஏற்பட்டு விட்டது.ஆனால் கிருஷ்ணரோ அவர் நண்பனின் வருகை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து உரையாடுகிறார்.குசேலர் மனதிலோ தன் நண்பனோ உலகை ஆளுபவன் நானோ சாதாரண மனிதன் என்றும் அந்த எதார்த்தம் குசேலரை தயக்கத்தில் வாட்டி வதைத்தது.
இருந்தாலும் பேசி கொண்டு இருந்து கிருஷ்ணர் குசேலர் கையில் இருந்த அவல் மூட்டையை பார்த்து இது என்னவென்று கேட்டு,குசேலர் கொண்டு வந்த அவலை மிகுந்த மகிழ்ச்சியோடு உண்டார்.தன்னுடைய நண்பன் தாம் கொண்டு வந்த அவலை அவ்வளவு பொன்சிரிப்போடு சாப்பிடுவதை பார்த்த குசேலருக்கு அதை பயன்படுத்தி தன்னுடைய உதவியை கேட்க மனம் வராமல் திரும்பி வந்து விட்டாராம்.
ஆனால் உலகை தன் வசம் வைத்த கிருஷ்ணர் தன் நெருங்கிய நண்பனின் வாட்டம் புரியாமல் இருப்பாரா?குசேலர் கிருஷ்ணரை சந்தித்து வீடு திரும்புவதற்குள் அவரின் வறுமையை முழுமையாக நீக்கிவிட்டார். அவ்வாறு குசேலர் கிருஷ்ணருக்கு அவல் கொடுத்த நாளும் அதனால் அவரின் வறுமை நீங்கிய நாளும் மிக விசேஷமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நாமும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கிருஷ்ணர் அல்லது குருவாயூர் அப்பனை அவலை வைத்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கும் வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.மேலும் இந்த அற்புதம் நிறைந்த நாளில் இந்த இந்த மந்திரத்தை மனதார சொல்லி வர கிருஷ்ணர் மனம் இறங்கி நம்முடைய வறுமை கவலைகளை தீர்த்து வைப்பார்.
மந்திரம்
“ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸாவாய
கோவிந்தாய நமோ நமஹ நமோ
விக்ஞான ரூபாய,
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ”
இறைவனை எப்பொழுதும் மனதார நம்பி வழிபாடு செய்தால் அவர் நாம் கேட்கமால் நம்முடைய துன்பத்தை தீர்த்து வைப்பார் என்பதற்கு குசேலர் ஒரு சாட்சி.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |