வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் கோலம்
பழங்கால தமிழ்நாட்டிற்கு சொந்தமானது, இந்த கோலாம் என்கின்ற கலை.
அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து கோலமிடுவது மிகவும் நல்லது.
அதிகாலையில் கோலம் போடுவதால் கஷ்டங்கள் விலகும். காலை 6 மணிக்குள் கோலம் போட வேண்டும்.
காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடமல் முகம் கழுவி, நெற்றி பொட்டு வைத்துக்கொண்டு போட வேண்டும்.
கோல மாவுடன் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம். வெறும் பச்சரிசி மாவிலும் கோலம் போடலாம்.
வாசலில் கோலமிடுவது, அழகுக்கு மட்டுமல்ல. தீய சக்திகள் வீட்டுக்கு உள்ளே நுழையாமல் தடுக்கவும் தான் கோலமிடுகிறோம்.
கோலமிடிடும்பொழுது உட்கார்ந்தபடி போடக்கூடாது. வலக்கையால் தான் கோலமிட வேண்டும்.
புள்ளிகள் வைக்கும்போது, கோடுகளை போடும்பொழுது ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும். மேலிருந்து கீழாக போடக்கூடாது.
ஈரிழைக் கோலம் மங்கலத்தைக் கொடுக்கும், ஒரு கோடு, மூவிழைக் கோலம் அமங்கலத்தைக் குறிக்கும். விழாக்காலத்திற்கு நாலிழைக் கோலம் நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |