கடினமான துன்பங்களிலிருந்து உங்களை காப்பாற்றும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்

By Sakthi Raj Apr 18, 2026 01:00 PM GMT
Report

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பது இயல்பான ஒன்றுதான். அதை கடந்தால் தான் வெற்றி என்கின்ற ஒரு அற்புதமான இலக்கை அடைய முடியும். ஆனால் அந்த கடினமான காலங்களை கடப்பதற்கு தான் பல மனிதர்கள் இங்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அப்படியாக பகவான் மீது வைத்துள்ள அன்பினால் பக்தியால் எவ்வளவு துன்பத்தையும் துயரத்தையும் தாங்கி நம்பிக்கை என்ற ஒற்றை தாரக மந்திரத்தினால் எல்லாம் கடந்து இறைவனுடைய அருளை பெற்ற பிரகலாதனின் கதையை நாம் கேள்வி பட்டு இருப்போம்.

தன்னுடைய பக்தனுக்காக ஒரே நாளில் தோன்றி மறைந்த பெருமாளின் நரசிம்மர் அவதாரம் பக்தர்களுக்கு எப்பொழுதும் துணையாக இருந்து காக்க கூடிய ஒரு அவதாரமாகவே இருக்கிறது.

கடினமான துன்பங்களிலிருந்து உங்களை காப்பாற்றும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் | Lakshmi Narasima Mantras For Problem Protection

சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஒரு வழிபாடு செய்ய தவறாதீர்கள்.. என்ன தெரியுமா?

சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஒரு வழிபாடு செய்ய தவறாதீர்கள்.. என்ன தெரியுமா?

அப்படியாக இந்த உலகத்தில் உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தம் அடையாமல் முழுமையான நம்பிக்கையில் உங்கள் மனதை செலுத்தி எல்லா கஷ்டங்களிலிருந்தும் கட்டாயம் பகவான் உங்களை விடுதலை செய்வார் என்று தீர்க்க நம்பிக்கையோடு அவருடைய வழிபாட்டையும் அவர் கூறிய மந்திரத்தையும் பாராயணம் செய்து வரும்பொழுது கட்டாயம் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய அற்புதத்தையும் மாற்றத்தையும் நாம் காணலாம்.

அந்த வகையில் உங்களுக்கு தீராத கஷ்டம் சொல்லி அழுவதற்கு கூட அருகில் ஆள் இல்லை என்கின்ற நேரத்தில் உங்கள் மனதில் வலிமையை வளர்த்துக் கொள்வதற்கு லட்சுமி நரசிம்மருடைய இந்த மந்திரத்தை பாராயணம் செய்து கொள்ளுங்கள். கட்டாயம் உங்கள் தடைகளை உடைத்து வெற்றி பெறக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் உருவாகும்.

கடினமான துன்பங்களிலிருந்து உங்களை காப்பாற்றும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் | Lakshmi Narasima Mantras For Problem Protection

2026: விதியை மாற்றும் சனி செவ்வாய் சேர்க்கை.. ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

2026: விதியை மாற்றும் சனி செவ்வாய் சேர்க்கை.. ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

லட்சுமி நரசிம்மர் மந்திரம் :

"ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச"

இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து கொள்ளுங்கள். அதைவிட குறிப்பாக தீர்க்க முடியாத வலியில் நீங்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது மனதில் இந்த மந்திரத்தை நீங்கள் பாராயணம் செய்து கொண்டே இருக்கும் பொழுது முற்றிலும் நரசிம்மருடைய இந்த மந்திரம் உங்களுக்கு கவசமாக அமைந்து பாதுகாக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US