உருவாகும் லட்சுமி நாராயண ராஜ யோகம்-அதிர்ஷடம் பெற போகும் ராசிகள்
ஒன்பது கிரகங்களில் புதன் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் நன்மையை அருள்பவர்கள்.புதன் புத்தியின் அதிபதி என்பதால் மனதில் மகிழ்ச்சி,தொழிலில் முன்னேற்றம் நடக்கும்.அந்த வகையில் புதனும் சுக்கிரனும் ஒன்று சேர நிறைய மாற்றங்கள் கொடுக்க இருக்கிறார்.
இவ்வாறாக இரண்டு கிரகம் ஒன்றாக சேரும் பொழுது லட்சுமி நாராயணனை போல் ராஜயோகம் உண்டாகும்.அப்படியாக 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை அடுத்து மீன ராசியில் புதனும் சுக்கிரனும் சந்திக்கவுள்ளனர.இதனால் மீன ராசியில் லட்சுமி நாராயண யோகம் உண்டாகும்.
சுக்கிரன் ஜனவரி 28ஆம் தேதி மீன ராசியில் பிரவேசித்து மே 31ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார். பிப்ரவரி 27-ம் தேதி இரவு 11.46 மணிக்கு புதன் மீன ராசியில் பிரவேசித்து இரண்டும் இணையும். அதாவது பிப்ரவரி 27 முதல் லக்ஷ்மி நாராயண் ராஜ யோகம் உருவாகும்.
அப்படியாக இந்த பயணத்தால் ராஜ யோகம் பெரும் ராசிகளை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு 12ஆம் வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான தடங்கல் விலகும்.சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.புதிய உறவுகளின் அறிமுகத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.இறைவழிபாட்டில் உங்கள் ஆர்வத்தை செலுத்துவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு 10ம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இணைவதால் புதிய பொன் பொருள் சேர்க்கை உருவாகும்.வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்.உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.வங்கியில் சேமிப்பு உயரும்.பழைய பிரச்னைகள் ஒரு முடிவிற்கு வ்ரும்.
மீனம்:
மீன ராசியின் லக்னத்தில் அதாவது முதல் வீட்டில் இந்த யோகம் உருவாக உள்ளது ஆதலால் இந்த காலகட்டத்தில் இவர்கள் நல்ல மாற்றம் காணப்படும்.உற்சாகம் பிறக்கும்.புதிய தொழில் தொடங்குவதை பற்றி சிந்திப்பீர்கள்.உங்களுக்கு சமுதாயத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |