மறந்தும் இவர்களை நம்பிவிடாதீர்கள்-விதுரன் சொல்லும் நீதி சாஸ்திரம்
மஹாபாரத பாத்திரங்களில் அறிவிற்கும் விவேகத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்தவர் விதுரன்.அப்படியாக வாழ்க்கையில் அவசியம் அனைவரும் பின்பற்ற வேண்டிய நீதி சாஸ்திரம் சொல்கிறார்.அதை பற்றி பார்ப்போம். மனிதன் என்னதான் தெளிவான சிந்தனையில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நாம் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது என்று சொல்கிறார்.
மனிதன் மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது. மனிதன் அவன் உணர்வுகளுக்கு தகுந்தாற் போல் அவன் நடவடிக்கை மாறும்.
சிலர் பார்த்து இருப்போம்.மிக மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது செய்வதறியாது பல முடிவுகள் வாக்குறுதிகள் கொடுப்பார்கள்.இன்னும் சிலர் ஒருவர் மகிழ்ச்சியான தருணம் பார்த்து அவர்களை தப்பான முறையில் கையாள்வதும் உண்டு.
அதாவது மனிதன் உணர்வு என்ற பிணைப்பில் அதிகம் மூழ்கி இருக்கும் பொழுது அவன் யாரிடமும் எந்த வாக்குறுதியும் கொடுப்பது சரி அல்ல.அதனை உணர்த்தும் வகையில்,
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
மனிதன் வாழ்க்கையில் துணை என்பது மிகவும் அவசியம்.அதாவது நட்பு.அந்த நட்பால் ஒருவர் உயரலாம் ஒருவர் தாழ்ந்து போகலாம்.ஆதலால் நட்பு வட்டாரங்கள் தேர்வு செய்யும் பொழுது மிகவும் கவனமாக தேர்வு செய்வது அவசியம்.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
நம்முடைய வாழ்க்கையில் நம்மை புரிந்து கொண்டு நமக்காக நம்முடன் கஷ்ட காலத்தில் உடன் இருப்பவர்கள் கிடைத்தால் எல்லோரும் பாக்கியசாலிகள்.அப்படியாக நாம் வாழ்க்கையில் மறக்ககூடாத நபர்கள் இருக்கிறார்கள்.நாம் மறந்தும் அவர்களை மறந்தால் அது நாம் செய்யும் மிக பெரிய பாவம் ஆகும்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
மேலும் நாம் புரிந்த கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை என்னவென்றால் நமக்கு எதிராக செயல்படுபவனை கூட நாம் நம்பி விடலாம்.ஆனால் உடன் இருந்து நமக்கு நம்பிக்கை துரோகம் செய்த நபரை ஒருபொழுதும் மன்னிக்கவும் கூடாது நம்பவும் கூடாது.
அவை நம்மை மீண்டும் ஆபத்தில் கொண்டு தான் விடும். ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |