சுவாமிக்கு எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்

By Sakthi Raj May 02, 2025 11:11 AM GMT
Report

 நிலையில்லாத இந்த வாழ்க்கையில் இறைவழிபாடு தான் நமக்கு மிகுந்த ஆறுதலை கொடுக்கக்கூடியது. அப்படியாக, நாம் கோயில்களுக்கு சென்று இறைவழிபாடு செய்யும் பொழுது அங்கு வீற்றியிருக்கும் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்போம்.

அதிலும் சிலர் எலுமிச்சம் பழம் மாலை சாற்றி வழிபாடு செய்யவேண்டும் என்று வேண்டுதல் வைத்திருப்பார்கள். பொதுவாக, ஆன்மீகத்தில் எலுமிச்சை பழத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

சுவாமிக்கு எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள் | Lemon Malai For Worship 

எலுமிச்சை  பழத்திற்கு எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய சக்திகள் உண்டு. மேலும், ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கும் தொடர் தடங்கல் மற்றும் தோல்வியில் இருந்து விடுபட சுவாமிக்கு   எலுமிச்சை பழம் மாலை சாற்றி வழிபாடு செய்வதால் அவர்களுக்கு உண்டான தடங்கல் எல்லாம் விலகி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ராகு குரு சேர்க்கை: 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அதிர்ஷ்ட ராஜ யோகம்

ராகு குரு சேர்க்கை: 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அதிர்ஷ்ட ராஜ யோகம்

அப்படியாக எலுமிச்சை பழம் மாலை சாற்றி வழிபாடு செய்வது நமக்கு எந்த அளவிற்கு நன்மை கொடுக்கிறது என்பதை காட்டிலும்,எலுமிச்சை பழத்தை ஊசியால் குத்தி மாலையாக சேர்க்க கூடாது என்று சொல்கிறார்கள்.

அவ்வாறு செய்யும் பொழுது பழத்தின் உள்ள தன்மையும் அதில் நிறைந்து இருக்கும் சக்திகளும் விலகி விடுவதாக சொல்கிறார்கள். அதனால், நாம் எந்த எண்ணிக்கையில் மாலையாக சாற்றி வழிபாடு செய்யவேண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றமோ, அந்த பழங்களை சுவாமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்வது நமக்கு மிக சிறந்த பலனை கொடுக்கும்.

சுவாமிக்கு எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள் | Lemon Malai For Worship

அல்லது, ஊசி வைத்து சேர்க்காமல் எலுமிச்சை பழத்தை நம்மால் மாலையாக மாற்றி வழிபாடு செய்ய முடியும் என்றாலும் அவ்வாறு செய்யலாம்.

மேலும், நாம் சுவாமிக்கு வைக்கும் அந்த எலுமிச்சை பழத்தை நாம் வீட்டிற்கு எடுத்து சென்று உபயோகம் செய்யலாம், அல்லது ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து விடலாம்.அல்லது கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக வழங்கலாம். அவ்வாறு செய்யும் பொழுது நாம் வைக்கும் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறுவதாக சொல்லப்படுகிறது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US