எலுமிச்சையின் ஆன்மீக மகத்துவங்கள்
நாம் சில கடைகளுக்கு செல்லும் பொழுதும் சில வீடுகளுக்கு செல்லும் பொழுதும் இல்ல பணி இடங்களிலும் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை போட்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம்.
சில நேரங்களில் நாம் எதற்காக அந்த இடத்திற்கு சென்றோம் என்பதை கூட மறந்து அந்த கண்ணாடி டம்ளரில் உள்ள எலுமிச்சையின் நீரையும் பார்த்துக் கொண்டே நின்று கொண்டுயிருந்த நொடிகளும் இருந்திருக்கும்.
அப்படியாக ஒருவரது வீட்டில் கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை தண்ணீரில் போட்டி வைப்பதற்கான காரணம் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
எலுமிச்சை என்பது வெறும் பழம் மட்டுமல்ல.அதற்கென பிரத்தியேக ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. ஆன்மீக ரீதியாக பார்த்தால் எலுமிச்சைக்கு எதையும் நேர்மறையான ஆற்றலாக மாற்றும் தன்மை உண்டு.
ஒருவர் தீய எண்ணத்துடன் நம்மை அணுகினாலும் தண்ணீர் டம்ளரில் இருக்கும் எலுமிச்சை இருப்பதை பார்த்தால் உளவியல் ரீதியாக சற்று திகைப்பு அடைவார்கள். அந்த திகைப்பே அவருடைய தீவிரத்தை குறைத்து விடும்.
மேலும் தண்ணீருக்கும் ஞாபக சக்தி உண்டு என பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீருக்கு தன்னை சுற்றி உள்ள ஆற்றலுக்கு தகுந்தாற்போல் மாற்றும் தன்மை உண்டு.
இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. கடவுளின் பெயர் சொல்லி ஹோமம் நிகழ்த்தும் போது கலச தீர்த்தமாகும்.அர்ச்சனையின் போது தீர்த்தம் ஆகும்.ஏன் சில சமயம் சாதுக்கள் பிறரை வாழ்த்துவோ அல்லது சபிக்கவோ வேண்டும் என்றால் கூட தண்ணீரை பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம்.
நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டுக்குமே தகுந்தவாறு மாறும் தன்மை உடைய நீரை நமக்கு ஏதுவான நேர்மறை ஆற்றலுக்குள் ஈர்க்கவேண்டும் என அங்கு எலுமிச்சையை பயன்படுத்துவது சிறப்பானதாகும்.
எலுமிச்சையை நீரில் இடும் போது போது அதன் இயல்பான தன்மையினால் அந்த இடத்தை சுற்றி இருக்கும் தீய சக்தியை போக்குகிறது.
மேலும் வீடுகள் அலுவலகங்கள் பணியிடங்கள் போன்ற இடங்களில் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போட்டு வைப்பது நன்மையை தரும்.
இவ்வாறு செய்கின்ற போது அதிலிருந்து பெருகும் ஆற்றல் அந்த இடத்தை முற்றிலுமாக தீய அதிர்வுகளிருந்து நம்மை காப்பாற்றுகிறது. அந்த இடத்திற்கு தேவையான நல்ல அதிர்வுகளையும் நமக்கு வாங்கித் தருகிறது இந்த எலுமிச்சை பழம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |