ராமாயணத்தில் இவர்கள் எல்லாம் யார் தெரியுமா?

By Sakthi Raj Oct 18, 2025 08:11 AM GMT
Report

  ராமாயணம் வரலாறு எல்லோரும் போற்றக்கூடிய ஒரு முக்கியமான காவியமாகும். அப்படியாக ராமாயணத்தில் பல கதாபாத்திரங்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நமக்கு ஒவ்வொரு வகையான கதைகளை சொல்கிறது. அப்படியாக ராமாயணத்தில் அமையப்பெற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்குரிய கதைகளை பற்றியும் பார்ப்போம்.

ராமாயணத்தில் இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? | List Of Characters From Ramayanam Epics

1. அகல்யை - ஸ்ரீ ராமபிரான் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.

2. அகத்தியர் - ஸ்ரீராமபிரான் போர்க்களத்தில் வெற்றி பெற அவருக்கு சூரியபாகவனின் சக்தி வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயம் மந்திரம் உபதேசித்த மாமுனிவர்.

3. அகம்பனன் - ராவணனிடம் ராமனைப்பற்றி தவறாக சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்

4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.

5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ஸ்ரீராமபிரானின் தரிசனம் கிடைக்க பெற்றவள்.

6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.

7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.

8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்

9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி

10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.

11. கும்பன் - கும்பகர்ணனின் மகன்

12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.

13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்

14. சுநைனா - ஜனகரின் மனைவி, சீதையின் தாய்

15. கவுதமர் - அகல்யையின் கணவர், முனிவர்

16. சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.

17. சம்பராசுரன் - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.

18. சபரி - மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்

19. சதபலி - வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.

20. சம்பாதி - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.

21. சீதா - ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.

22. சுமந்திரர் - தசரதரின் மந்திரி, தேரோட்டி

23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.

24. சுஷேணன் - வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.

25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.

26. தசரதர் - ராமனின் தந்தை

27. ததிமுகன் - சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்

28. தாடகை - காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.

29. தாரை - வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.

30. தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி

31. திரிசடை - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.

32. திரிசிரஸ் - ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.

33. நளன் - பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்

34. நாரதர் - பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.

35. நிகும்பன் - கும்பகர்ணனின் மகன்

36. நீலன் - வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்

37. பரசுராமர் - விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்

38. பரத்வாஜர் - பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்

39. பரதன் - கைகேயியின் மகன், ராமனின் தம்பி.

40. மந்தரை - கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.

கேட்ட வரத்தை வழங்கும் எட்டுக்குடி முருகன் கோயில்

கேட்ட வரத்தை வழங்கும் எட்டுக்குடி முருகன் கோயில்

41. மதங்கர் - தவ முனிவர்

42. மண்டோதரி - தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.

43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.

44. மால்யவான் - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.

45. மாதலி - இந்திரனின் தேரோட்டி

46. யுதாஜித் - கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்

47. ராவணன் - மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.

48. ராமன் - ராமாயண கதாநாயகன்

49. ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.

50. ருமை - சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.

51. லங்காதேவி - இலங்கையின் காவல் தெய்வம்

52. வசிஷ்டர் - தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.

53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்

54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்.

55. வால்மீகி - ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.

56. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.

57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.

58. விராதன் - தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.

59. விபீஷணன் - ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.

60. வினதன் - கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.

61. ஜடாயு - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.

62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின் தந்தை.

63. ஊர்மிளா - லட்சுமணனின் மனைவி.

64. ஜாம்பவான் - கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்

65. அனுமான் - அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.

66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.

67. மாண்டவி - பரதனின் மனைவி.

68. சுருதகீர்த்தி - சத்ருக்கனனின் மனைவி. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US