வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? - அவசியம் அறியவும்
பொதுவாக வீட்டில் பூச்சிகள் காணப்படும். பலர் அதை புறக்கணிக்கிறார்கள், மற்றவர்கள் அதை விரட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் பல்லிகளை எளிதில் பார்க்க முடியும். இந்த உயிரினங்கள் கூரை அல்லது சுவரில் ஊர்ந்துக்கொண்டு இருக்கும்.
பலர் இதற்கு பயப்படுகிறார்கள் மற்றும் அதை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்.
பல்லிகள் பற்றி ஜோதிடத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டில் பல்லி இருப்பது நல்லதா கெட்டதா என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா?
பல்லியானது வீட்டில் இருப்பது பண சம்பந்தப்பட்ட விடயங்களில் நல்லதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.
சில மதத்தவர்கள் புதிய வீட்டின் வாஸ்து பூஜையின் போது வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்துவது வழக்கம்.
வீட்டில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பல்லி அதிகமாக வழங்குகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் இருந்தால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
தீபாவளி அன்று வீட்டில் பல்லி இருந்தால், அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் லட்சுமி தேவி உதவியுடன் இருக்கப் போகின்றீர்கள் என்று அர்த்தம்.
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம். இவ்வாறு இருந்தால் உங்களுக்கு நற்செய்தி வரும்.
புதிய வீட்டிற்கு செல்கின்றீர்கள் என்றால், உங்களுடைய கண்ணிற்கு பல்லி தென்பட்டால் நல்லது.
பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு என்று ஐதீகம் கூறுகிறது. முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் கிடைக்கும்.
கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்த்தால் தேவர்களை பார்ப்பதற்கு சமனாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |