ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய ஆலயம் ”சுவாமி நாராயண் மந்திர்”
ஐரோப்பா கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயம் என்ற புகழுக்குரியது லண்டனின் நீஸ்டன் நகரில் அமையப்பெற்றுள்ள சுவாமி நாராயண் மந்திர்.
1992ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1995ம் ஆண்டு பிரமுக் சுவாமி மகாராஜாவால் நிறுவப்பட்டது.
பாரம்பரிய நுட்பங்களுடன் வடஇந்திய பாணியில் மிக உயர்ந்த கோபுரங்களை கொண்டு பிரம்மாண்டமாக காட்சி தரும் இவ்வாலயம் உலக மக்களை கவர்ந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பின்(BAPS) அங்கமாகவும் இது திகழ்கிறது.
கோயிலின் அடித்தளத்திற்காக மட்டுமே 4 ஆயிரத்து 500 டன் கான்கிரீட் கலவை ஊற்றப்பட்டது, 2000 டன் இத்தாலிய பளிங்கு மற்றும் 2828 டன் பல்கேரிய சுண்ணாம்பு கற்கள் கொண்டு இக்கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை கற்களால் ஆன சிற்பங்கள், சுமார் 1526 சிற்பிகளை கொண்ட குழுவினரால் செதுக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் உள்ளே நுழைந்ததும் மிகப்பாரிய பஜனை மற்றும் தியானம் செய்யும் ஹாவேலி கூடம் அமையப்பெற்றுள்ளது.
கோயில் வளாகத்திற்குள்ளேயே அலுவலகங்கள், புத்தகக்கடை, உடற்பயிற்சி கூடம் மற்றும் இந்து மதத்தை புரிந்துகொள்வது என கலாசார மையமும் உள்ளன.
ராமாயணம், மகாபாரதம், சிவபெருமானின் புகழை போற்றும் சிற்பங்கள் நமக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.
உள்ளே நுழைந்ததும் விநாயகப்பெருமானை தரிசிக்கலாம், அடுத்து ராமன் சீதாதேவி, லட்சுமணன் ஒரு சன்னதியில் அருள்புரிகின்றனர்.
பிறையும், நாகமும் கூடிய சிவபெருமான் பார்வதி தேவியுடன் இருக்கும் சன்னதியும், கதாயுடன் ஏந்தியபடி ஆஞ்சநேயாவும் அருள்பாலிக்கின்றனர்.
தினமும் இவ்வாலயத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் தீபாராதனை பிரசித்தி பெற்றதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |