பூ மழையில் நனைய அழகர் மலைக்கு திரும்பினார் கள்ளழகர்

Report

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி மதுரை வந்த கள்ளழகர், கடந்த 23-ந் தேதி வைகை ஆற்றில் இறங்கினார்.

இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி வண்டியூரில் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார காட்சியும் நடைபெற்றன.

பூ மழையில் நனைய அழகர் மலைக்கு திரும்பினார் கள்ளழகர் | Lord Kallazhagar Returned To Alaghar Hill

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் தரிசித்தனர்.

பூ மழையில் நனைய அழகர் மலைக்கு திரும்பினார் கள்ளழகர் | Lord Kallazhagar Returned To Alaghar Hill

அதை தொடர்ந்து அங்குள்ள கருப்பண்ணசுவாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலையை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.

அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க மனமுருக வேண்டியும் கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு மேல் அழகர்கோவில் திரும்பிய கள்ளழகருக்கு, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US