மகாபாரதம்: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கிருஷ்ண பகவான் சொல்லும் 5 முக்கிய அறிவுரைகள்
உலகம் என்பது ஒரு வாழ்க்கை பாடம் போல். அதில் நாம் இறுதியில் என்ன கற்றுக்கொண்டோம்? நம்மை எப்படி செதுக்கி கொண்டோம் என்பதில் தான் முடிவு இருக்கிறது.
அந்த வகையில் தீராத மன சஞ்சலம், குழப்பங்கள் மாய உலகில் தேவையில்லாத விஷயங்களில் மனம் சிக்கிக் கொண்டு தவிக்கின்ற வேளையில் நாம் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்று பகவான் கிருஷ்ணர் நமக்கு ஒரு சில அறிவுரைகளை கூறுகிறார். அதை பற்றி பார்ப்போம்.
1. நம்மை விட்டு ஒருவர் விலகுகிறார் என்றால் நாம் அதற்கு வருத்தப்பட தேவையில்லை. காரணம் அவர்கள் தான் நம்மை இழந்து இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்த அன்பு நம்முடைய மனதில் தூய்மையைக் குறிக்கிறது. அது வெறும் உணர்ச்சி அல்ல. அந்த தூய்மையை இழந்து செல்வதால் இழப்பு அவர்களுக்கே.

2. அதை போல், நம்மை புரியாமல் நம்மை விட்டு விலகிச் சென்றவர்களிடமோ அல்லது நம்மை புரிந்து கொள்ளாமல் நம்மை காயப்படுத்துபவர்கள் இடத்தில் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்று நாம் முயற்சி செய்யக் கூடாது. காரணம், அவர்களுக்கு நாம் உணர்ச்சியற்ற ஒரு கதைகளாக தான் இருப்போம்.
3. வாழ்க்கையில் எல்லோரும் ஒருநாள் தனியாக நிற்கக்கூடிய ஒரு நிலைமைவரலாம். அப்பொழுதுதான் நமக்கு நாமே நமக்கு மிகப் பெரிய பலம் என்று புரியும்.
4. எவ்வளவு பெரிய இக்கட்டான நிலையில் நம்முடைய நம்பிக்கை இழந்த பொழுதும் மனதை நாம் உடைத்து விடக்கூடாது. காரணம், உடைந்த நம்பிக்கையை நாம் மீட்டு எடுத்துவிடலாம். ஆனால், உடைந்த மனதை நாம் எப்பொழுதும் பழையபடி மீட்க முடியாது.
5. இறுதியாக மனிதர்கள் மனதில் கொள்ள வேண்டியவை இந்த உலகத்தில் நம் பிறப்பு நம்முடைய ஆன்மாவை வலிமையாக மாற்றத்தானே தவிர எதையும் நாம் பொருட்கள் சேர்த்து வைத்தோம் என்பதில் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |