தீராத துன்பம் என்று புலம்புபவர்களா? கிருஷ்ண பகவானின் இந்த அறிவுரை கேளுங்கள்
நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் துன்பம் என்பது இயல்பானது. ஆனால், அது எந்த அளவிற்கு நம் மனதுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு துன்பம் என்பது நம்மை துரத்திக் கொண்டிருக்கிறது.
அப்படியாக, நீங்கள் வாழ்க்கையில் தீராத துன்பம் என்று தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் புலம்பி கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்காக பகவான் கிருஷ்ணர் சொல்லக்கூடிய இந்த அறிவுரையை கேளுங்கள். உங்களுடைய மனம் எளிமையாக மாறும்.
1. பல நேரங்களில் நமக்கு சொந்தமில்லாத ஒன்றை இழந்துவிட்டோமே என்று கதறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு சொந்தமுள்ள ஒன்றை நாம் இழப்பதில்லை. அது எப்பொழுதும் நம்முடனே இருக்கிறது என்று சொல்கிறார் பகவான் கிருஷ்ணர். நமக்கானது நம்மை விட்டு எங்கும் செல்லாது.
2. நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் எப்போதும் பிடித்து வைப்பதை காட்டிலும் அதை விட்டு விடுவது சிறந்தது. மறுபடியும் நம்மிடம் வந்தால் அது நம்முடையது. வரவில்லை என்றால் அது எப்பொழுதும் நம்முடையது அல்ல.

3. நாம் நாளை நடக்க வேண்டியதை பற்றி இன்றைய பொழுதே கவலை பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மையில் நாளை நடக்க வேண்டியது கட்டாயம் சரியான நேரத்தில் நம்முடைய எந்த ஒரு வேண்டுதலும் இல்லாமல் நடந்து விடும்.
4. நம்முடைய வாழ்க்கையில் நம் செல்லும் பாதையில் சரியாக நடக்க வேண்டியது நம் கடமை. அதில் யாரெல்லாம் வந்து செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒரு அனுபவம் என்று எடுத்துக் கொண்டு கடந்து விட வேண்டும்.
5. இந்த உலகத்தில் நிலைத்து நிற்கக் கூடியது ஒரே ஒரு விஷயம் அமைதி மட்டம் தான். அது தான் நிரந்தர மகிழ்ச்சி கொடுக்கக் கூடியதும். அதை தவிர்த்து நொடிப்பொழுதில் மாறக்கூடிய ஒன்றுக்கு பின்னால் ஓடுவதை காட்டிலும் அமைதி தரக்கூடியதற்கு பின்னால் ஓடினோம் என்றால் எப்பொழுதும் நமக்கு துன்பம் என்று ஒன்று இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |