சிவபெருமானே விரும்பிய காசி சிவகாசி: சுவாரஸ்ய நிகழ்வு
காசி என்றாலே பலரின் நினைவிற்கு வருவது வாரணாசி தான்.
ஆனால் தமிழ்நாட்டிலேயே தென்காசி மற்றும் சிவகாசி என இரண்டு காசி உள்ளது.
இதில் பலருக்கும் வடக்கில் உள்ள வாரணாசி காசி விஸ்வநாதர் மற்றும் தென்காசி விஸ்வநாதர் பற்றி அறிந்திருப்பார்கள்.
ஆனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரில் உள்ள விஸ்வநாதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.
சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரின் திருவிளையாடலால் தான் சிவகாசி என இந்த நகரத்திற்கு பெயர் வந்தது என கூறப்படுகிறது.
பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் வந்த சிவபெருமான் "வடக்கே என்னை காண வரும் பக்தர்கள் வரும் வழியிலேயே இறந்துவிடுவதால் என்னை எளிதில் தரிசிக்க தெற்கில் ஒரு காசியை உருவாக்கு" என மன்னனிடம் கூறினார்.
இதனால் அந்த மன்னன் அங்கு காசி விஸ்வநாதர் போலவே ஓர் கோவில் எழுப்ப , தெற்கில் அமைந்த காசி என்பதால் அந்த ஊர் தென்காசி என பெயர் பெற்றது.
தெற்கே காசியை உருவாக்க எண்ணிய மன்னன் காசி விஸ்வநாதர் சிலை போல செய்து அதை காசியில் இருந்து தென்காசி நோக்கி எடுத்து செல்லும் போது, வழியில் வில்வ மரத்தடியில் ஓய்வு எடுக்கிறான்.
பின்னர் அங்கிருந்து புறப்படும் பொழுது சிவலிங்கத்தை சுமந்து வந்த பசு அங்கிருந்து நகரவில்லை.
பல கட்ட முயற்சிக்கு பின் சிவனின் விருப்பத்தை அறிந்த மன்னன் லிங்கத்தை அங்கேயே விட்டுச் சென்று விடுகிறான். அந்த ஊர் தான் இன்றைய சிவகாசி.
அந்த சிவனே விரும்பி ஏற்ற ஊர் என்பதால் இந்த ஊர் சிவகாசி என பெயர் பெற்றது என கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |