விருச்சிக ராசியினருக்கு வாழ்க்கையில் ஒரு காதல் தோல்வி கட்டாயம் இருக்குமாம்
ஜோதிடத்தில் செவ்வாய் பகவானுடைய ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசியினர் எப்பொழுதும் துணிவாக செயல்பட கூடியவர்கள். அந்த வகையில் விருச்சிக ராசியினருக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
விருச்சிக ராசியினர் ஆழமான காதல் உணர்வு கொண்டிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் காதலில் ஒரு முறை தோல்வியை சந்தித்த பிறகு நிலையான உறவுக்குள் சொல்கிறார்கள். விருச்சிக ராசி பொருத்தவரை இவர்கள் அவர்களுடைய காதலை மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
அதேபோல், இவர்கள் ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதிலும் உறுதியாக இருப்பார்கள். இவர்களை பொருத்தவரை இவர்களுக்கு 27 முதல் 29 வயதிற்கு மேல் திருமணம் செய்வது ஒரு நல்ல புரிதலை உண்டு செய்யும்.
மேலும், மீனம், ரிஷபம் மற்றும் கடக ராசியினர் இவர்களுக்கு மிகச் சிறப்பான பொருத்தமாக அமைவார்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். உறவுகளை மேம்படுத்த ஒரு நல்ல ஆன்மீக குருவினுடைய வழிகாட்டுதலை பெறுவது அவசியம்.
ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபடுவது குழந்தை வடிவில் முருக பெருமானை வழிபடுவது இவர்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை வாழ்க்கையில் கொடுக்கும்.