12 லக்னங்களுக்கும் அதிர்ஷ்டமான தெய்வப் படங்கள் எது தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. இந்த லக்னம் தான் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது. அப்படியாக 12 லக்னங்களுக்கும் உள்ள அதிர்ஷ்ட தெய்வங்களை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் ஹனுமன் படத்தை வைத்துக் கொள்ளலாம். அது அதிர்ஷ்ட சின்னமாகவே இருக்கும்.
ரிஷபம்:
இவர்களுக்கு அதிர்ஷ்ட சின்னமாக கோவில் கோபுரம் இருக்கிறது.
மிதுனம்:
இவர்கள் மகான்கள் படங்கள், ஸ்ரீ ரங்கநாதர் படங்களை வைத்துக் கொள்ளலாம்.
கடகம்:
இவர்களுக்கு பழனி முருகன் மிகச் சிறந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடியவராக இருக்கிறார்.
சிம்மம்:
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கழுகு படத்தை வைத்துக் கொள்ளும்போது அதிர்ஷ்டம் தேடி வருகிறது.
கன்னி:
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் இரட்டைக் குதிரை, இரட்டை தேவதைகள் படங்கள் வைத்துக் கொள்ளும் பொழுது அதிர்ஷ்டம் உருவாக்குகிறது.
துலாம்:
இந்த லக்னக்காரர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமான் படத்தை வைத்துக் கொள்ளலாம் அல்லது பெரிய மகான்கள் அல்லது குருவின் படத்தை வைத்துக் கொள்ளலாம்.
விருச்சிகம்:
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்மன் படத்தை வைத்துக் கொள்ளலாம் அல்லது சிங்கம் படத்தை வைத்துக் கொள்ளலாம்.
தனுசு:
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குருவாயூரப்பன் படம் வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் படத்தையும் இவர்கள் வைத்துக் கொள்ளலாம்.
மகரம்:
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நின்று கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வைத்து வழிபாடு செய்வதும் படத்தை வைப்பதும் அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
கும்பம்:
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படங்களை வைத்துக் கொள்ளலாம் அதிர்ஷ்டத்தை உருவாக்கும்.
மீனம்:
திருப்பதி தங்க கோபுரம் படத்தை வைக்கலாம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |