அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புத பூ

By Sakthi Raj Nov 12, 2024 05:29 AM GMT
Report

நிலையில்லாத வாழ்க்கையில் நம்முடைய ஒரே நம்பிக்கை இறைவன் மட்டும் தான்.வாழ்க்கையில் எத்தனை துன்பம் வந்தாலும் நம்மை தாங்கி பிடிப்பது இறைநம்பிக்கை மட்டுமே.அப்படியாக நாம் இறைவனை வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு பிடித்த சில பொருட்களை படைத்தது வழிபாடு செய்வதுண்டு.

அவ்வாறு செய்யும் பொழுது இறைவன் மனம் மகிழ்வார் என்பது நம்பிக்கை.மேலும் அவ்வாறு இறைவனுக்கு அபிஷேக பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி கொடுக்கும் பொழுது நம்முடைய கர்ம வினைகளும் தீரும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இறைவனுக்கு இந்த ஒரு பொருள் படைத்து வழிபாடு செய்வதால் நம்முடைய தலையெழுத்தே மாறும் என்று சொல்லப்படுகிறது.அந்த பொருள் என்ன எவ்வாறு அதை கொண்டு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புத பூ | Lucky Flower Parigarangal

இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யும் பொருட்களில் பூக்கள் முதல் இடத்தை பிடிக்கிறது.அவ்வாறு இறைவனுக்கு உகந்த பூக்களை வாங்கி தருவதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு விதமான பலனும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நம்முடைய தலையெழுத்தை எழுதக்கூடியவர் பிரம்ம தேவன்.இருந்தாலும் அந்த தலையெழுத்தையே மாற்றி அமைக்க கூடிய வல்லமை பெற்றவர் சிவபெருமான்.மனிதன் செய்யும் பாவம் கர்ம வினைகளுக்கு விடை கொடுப்பவர் சிவபெருமான் தான்.ஆனால் பலரும் சிவபெருமானை வழிபட தயங்குவார்கள்.

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா சிறப்பு அபிஷேகம்

காரணம் அவர் நிறைய கஷ்டத்தை கொடுப்பார் என்று.உண்மையில் அவர் நம்முடைய கர்ம வினைகளை முற்றிலும் தீர்த்து சுகமான வாழ்க்கையை அருள்வார். அப்படியாக சிவபெருமானுக்கு உகந்த நாட்களாக திகழ்வது பிரதோஷம் மற்றும் சிவராத்திரி.

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சிவராத்திரியை தவிர்த்து மாதம் ஒருமுறை சிவராத்திரி என்பது வரும். அன்றைய தினமும் சிவபெருமானுக்கு உகந்த தினமாகவே கருதப்படுகிறது. பிரதோஷத்தை பொறுத்தவரை மாதத்தில் இரண்டு முறை வரும், சிவராத்திரி மாதத்தில் ஒரு முறை வரும், மாதத்தில் மூன்று நாட்கள் இந்த ஒரு மலரை மட்டும் சிவபெருமானுக்கு கொடுத்து நாம் இந்த ஒரு மந்திரத்தை கூறினோம் என்றால் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும் என்று கூறப்படுகிறது.

அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புத பூ | Lucky Flower Parigarangal

அப்படியாக நம்முடைய தலையெழுத்தையே மாற்ற கூடிய மலராக நாகலிங்கம் மலர் இருக்கிறது.நாகலிங்க மலர் என்பது பரவலாக அனைத்து இடத்திலும் கிடைக்காது ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த மரங்கள் இருக்கும். பெயருக்கு ஏற்றார் போல் இந்த பூவிற்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. காரணம் என்னவென்றால் ஒரு சிவலிங்கமும் அதற்கு மேல் ஐந்து தலை நாகமும் இருப்பது போலவே காட்சியளிக்கும்.

மற்ற தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வதை விட சிவபெருமானுக்கு இந்த நாகலிங்கம் பூவை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அதீத பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த நாக லிங்க மலரை மாதத்தில் வரும் அந்த முக்கியமான மூன்று நாட்களில் சிவபெருமானுக்கு கொண்டு வழிபாடு அதீத பலன் கிடைக்கும்.

மேலும் அந்த மலர் கொண்டு பூஜை செய்யும் பொழுது "ஓம் சிவாய நம". என்னும் மந்திரத்தை நம்மால் இயன்ற முறை எவ்வளவு முறை கூற முடியுமோ அவ்வளவு முறை கூற வேண்டும்.அவ்வாறு சொல்லும் பொழுது நம்முடைய துன்பம் நீங்கி நல்ல முறையில் வாழ்க்கை அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US