ஒவ்வொரு ராசியினர் வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்

By Sakthi Raj Sep 28, 2024 07:00 AM GMT
Report

ஒவ்வொரு ரசிக்கும் ஒவ்வொரு அதிர்ஷ்ட மரங்கள் மற்றும் செடிகள் இருக்கும்.அதை ஒருவர் வீட்டில் வளர்க்க அவர்களுக்கு அதிர்ஷ்டம் உருவாக்குவதோடு.அந்த இடத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அந்த செடியை அவர்கள் வளர்ப்பதால் அவர்களுக்கு நல்ல செல்வம் செழிக்கும்.இப்பொழுது ஒவ்வொரு ராசியினர் வளர்க்கவேண்டிய அவர்களுக்கான அதிர்ஷ்ட செடியை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் Anant Mool என்னும் செடியை வளர்ப்பது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்று தரும்.இந்த செடியில் மஞ்சள் மற்றும் பச்சை நிற பூக்கள் பூக்கும்.மேலும் மேஷ ராசியினர் சிவப்பு சந்தனக்கட்டை மரம் வளர்த்தாலும் அவர்களுக்கு நல்ல நன்மை உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் பப்பாளி செடி மற்றும் White Chameli என்னும் வெள்ளை பூக்கள் பூக்கும் செடி ஆகியவைகளை வளர்க்கலாம்.அது அவர்களுக்கு நல்ல தொழில் வளர்ச்சியை உருவாக்கும்.


மிதுனம்

மிதுன ராசியினர் பலாப்பழ செடிகளும்,Aloe vera எனப்படும் தாவர வகை செடிகளும் இவ்ரகளுக்கு வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கி தரும்.

கடகம்

கடக ராசியினர் மருத்துவ நலன்கள் பல கொண்ட Palasa என்னும் சிவப்பு நிற பூச்செடிகளையும், Khirni பழம் விளையும் செடிகளை வளர்க்க வேண்டும்.அது அவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சி மாற்றம் கொண்டு வரும்.

ஒவ்வொரு ராசியினர் வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள் | Lucky Plant For Zodiac Sign

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வில்வ மரம், வெள்ளை எருக்க செடிகளை வளர்க்கலாம்.இதனால் இவரக்ளுக்கு வாழ்க்கையில் தடை யாவும் விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் உருவாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மா மரம் மற்றும் Apamarg என்னும் ஆயுர்வேத குணம் கொண்ட செடியையும் வைக்கலாம்.இது இவர்களுக்கு தோஷ நிவர்த்தியாக செயல்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வெள்ளை நிற பூக்கள் முளைக்கும் செடிகளையும், chameli என்னும் பூச்செடியையும் வளர்க்கலாம்.இதை வளர்ப்பதால் படிப்பு மற்றும் தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் பெருகச்செய்யும்.

ஒவ்வொரு ராசியினர் வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள் | Lucky Plant For Zodiac Sign

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் Kadhira வகை என்னும் செடியும், பச்சை நிற இலையில் வெள்ளை பூக்கள் முளைக்கும் மரங்களையும் வளர்க்க வேண்டும்.அதனால் அவர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்க செய்யும்.

தனுசு

வாழை மரம் மற்றும் மாமரம் வளர்க்க வேண்டும்.இதனால் நல்ல செல்வம் பெருகும். மகரம் வேப்ப மரம், Bichchhu எனப்படும் ஸ்கார்ப்பியன்கள் மரம், கருவேல மரம் ஆகியவைகளை வளர்க்கலாம்.

கும்பம்

கருவேல மரம் மற்றும் வேப்ப மரங்களை வளர்க்க வேண்டும்.நல்ல பலன் கிடைக்கும்.நீண்ட நாள் நடக்காத நல்ல காரியம் நடக்கும்.

மீனம்

வாழை மரம், மாமரம், அரசமரம் ஆகியவைகளை மீன ராசிக்காரர்கள் வளர்க்கலாம்.இதனால் கெட்ட நேரம் குறைந்து நல்ல நேரம் உருவாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US