குரு அஸ்தமனத்தால் எந்தெந்த ராசியினர்கள் ஆபத்துக்களை சந்திப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குருவின் அஸ்தமனம்
ஜோதிடத்தில் மிகவும் புனிதமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகின்றார். கல்வி, செல்வம், குழந்தைகள், திருமணம் இவற்றிற்கு காரணமாக அமையும், குரு பகவானின் சிறிய மாற்றம் கூட பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.
இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த எதிர்மறை விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிப்பதுடன், தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்.
மிதுன ராசியில் ஜுன் 9ம் தேதி அஸ்தமனம் அடைந்த குரு, மீண்டும் ஜுலை 9ம் தேதி கு உதயமாகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர்மறையான விளைவுகளையும், ஆபத்துக்களையும் சில ராசியினர் சந்திப்பதாக கூறப்படுகின்றது. அந்த ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு குருவின் அஸ்தமனம் பல பிரச்சனை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாம். வேலையில் இருப்பவர்கள் சில அதிருப்தி, மேலதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலீட்டில் கவனம் தேவை, திருமண உறவில் சில சிக்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், இதனை அமைதியான மனதுடன் கையாள வேண்டும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.
சிம்மம்
சிம்மா ராசியினர் இந்த காலக்கட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படாவிட்டால் தோல்வியடைக்கூடுமாம்.
பயணங்களுக்கு இந்த சூழ்நிலை சாதகமற்றதாக கருதப்படுவதுடன், ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியமாக இருப்பது பெரிய செலவுக்கு வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த கால கட்டத்தில் முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். பயணங்களை இந்த நேரத்தில் தவிர்க்கவும்.
அலுவலகத்தில் கவனமாக இல்லாவிட்டால் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் அலுவலகத்தில் சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் பேச்சு மற்றும் ஈகோவைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
தனுசு
தனுசு ராசியினர் அதிகமான சிக்கல்களை இந்த கால கட்டத்தில் சந்திப்பார்கள். இழப்புகளை தவிர்க்க வயது மூத்தவர்களின் ஆலோசனை பெறவும்.
துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், சரியான வார்த்தை உபயோகித்து சிக்கல்களை சிறந்த முறையில் தீர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், கடன் வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தவும். ஆரோக்கியத்தில் கவனம் எடுக்கவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |