இன்றைய ராசி பலன்(13.02.2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம்.தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.ஒரு சிலருக்கு நண்பர்களால் பிரச்சன்னை தோன்றும்.மனதை அமைதியாக வைத்து கொள்வது அவசியம்.

ரிஷபம்:

இன்று அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சில செயல்நடக்க வாய்ப்புகள் உள்ளது.மூன்றாம் நபருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.பெருமாள் வழிபாடு மன அமைதியை தரும்.

மிதுனம்:

உங்கள் பேச்சுக்களில் மிக கவனமாக இருக்கவேண்டும்.குடும்பத்தில் பிரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள்.முன்னோர்கள் வழிபாடு நன்மை அளிக்கும்.

கடகம்:

நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பணவரவில் ஏற்பட்ட தடை அகலும். லாப குருவால் ஆதாயம் உண்டு.எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்.

சிம்மம்:

ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் உருவாகும்.ஆதலால் ஒரு விஷயத்தை செய்து முடிக்க மிகவும் சிரமப்படுவீர்கள்.பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும்.

கன்னி:

நீங்கள் நினைப்பதும் நடப்பது வேறாக இருக்கும். பிறரை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிக கவனமாக செல்ல வேண்டும்.

துலாம்:

மனதில் தன்னம்பிகையும் உற்சாகமும் உண்டாகும்.உங்களை சுத்தி இருப்பவர்கள் உங்களுக்கு முழுமையான ஆதரவை கொடுப்பார்கள்.பிறரை நம்பி எந்த வேலையும் செய்யவேண்டாம்.

முருகனின் முழு ஆசியை பெற கேட்க வேண்டிய உள்ளம் உருகுதையா பாடல்

முருகனின் முழு ஆசியை பெற கேட்க வேண்டிய உள்ளம் உருகுதையா பாடல்

விருச்சிகம்:

போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர். வருவாயில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி வெற்றியாகும்.உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு:

உங்கள் மனதில் ஒருவித சந்தோசம் பெருகும்.தாய் வழி உறவால் ஆதாயப்படுவீர்கள்.கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் உருவாகும்.அரசு வழி வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும்.

மகரம்:

மனக்குழப்பம் உண்டாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும்.

கும்பம்:

நினைப்பது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மீனம்:

வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.புதிய நட்புகளின் அறிமுகத்தால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.போட்டியாளர்களால் ஏற்பட்ட தடைகள் விலகும்.இறைவழிபாடு மட்டுமே ஆபத்தில் இருந்து காப்பாற்றும்.    

/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US