மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்

By Yashini Jun 11, 2024 02:30 PM GMT
Report

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 12ஆம் திகதி முதல் தொடங்க உள்ளதாக மீனாட்சி அம்மன் கோவில் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 21ஆம் திகதி வரை நடக்கும் இந்த உற்சவத்தில் சாயரட்சை பூஜை நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் | Madurai Meenakshi Amman Temple Aani Unjal Utsavam

அதன் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி சன்னதி நூறு கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுவர்.

அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திரு பொன்னூஞ்சல் ஓதப்படும்.

அதன் பிறகு தீபாரதனை முடிந்து இரண்டாம் பிரகாரம் சுற்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் | Madurai Meenakshi Amman Temple Aani Unjal Utsavam

ஆனி பௌர்ணமி தினமான 21ஆம் திகதி உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனியால் அபிஷேகம் நடக்கும்.

அன்று இரவு 7 மணிக்கு சித்திரை வீதிகளில் வெள்ளி குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் அம்மன் சுவாமி புறப்பாடு நடைபெறும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US