மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா ருத்ராபிஷேக விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது உலகப் புகழ்பெற்றது.
12 மாதங்களும் விசேஷமான திருவிழாக்கள் நடைபெறும் இக்கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பானது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும், வருகின்ற செப்டம்பர் 20ஆம் திகதி சுந்தரேஸ்வரர், மீனாட்சி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 12 மணிக்குள் விக்னேஸ்வரர் பூஜை 108 கலச பூஜை உள்ளிட்டவை நடத்தப்படும்.
அதேபோல் மாலை 6.15 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாரதனை, பிரசாதம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
இந்த மகா ருத்ர அபிஷேக விழாவிற்கு பால், தயிர், சர்க்கரை, பழங்கள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணெய் போன்ற பொருள்களை கோயிலில் பக்தர்கள் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |