மகர விளக்கு பூஜை.., சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் திகதி மண்டல பூஜை தொடங்கியது.
கடந்த வியாழக்கிழமையுடன் மண்டல பூஜை நிறைவு பெற்ற நிலையில், அன்றிரவு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை மூடப்பட்டது.
இதற்கிடையே, மண்டல பூஜை காலத்தில் மொத்தம் 32 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை கோயிலில் மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகிற ஜனவரி மாதம் 14ஆம் திகதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |