மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்..

By Sakthi Raj Sep 19, 2026 11:37 AM GMT
Report

மனிதர்களாகிய எல்லோருக்குமே கஷ்டமான காலங்களை கையாள்வதில் ஒரு சிரமங்களை சந்திக்கின்றோம். அந்த வகையில், மகாபாரதம் எனும் பெரும் காவியம் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும்? இழப்பிலும் நாம் எப்படி தைரியத்தோடு இருக்க வேண்டும்? தர்மத்தை எந்த நிலையிலும் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒரு அற்புதமான ஒரு வாழ்க்கை பாடம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

அந்த வகையில், ஒருநாள் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் மிகவும் மனம் உடைந்து கேட்கிறார். "கிருஷ்ணா" என்னிடம் இருந்த எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன்.

இனி என்னால் எப்படி நம்பிக்கை உடன் இருக்க முடியும்? என்று அவர் ஒரு சந்தேகத்தை கேட்கிறார். அப்பொழுது கிருஷ்ண பகவான் அமைதியாக அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்.. அர்ஜுனா! நீ இழந்தது பொருட்களை மட்டுமல்ல.

மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்.. | Mahabharata Says Loss Is Not End But A New Start

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?

உன்னுடைய எதிர்பார்ப்புகள், உன்னுடைய கனவுகள், உன் நம்பிக்கையும் கூட உன்னிடம் இருந்து விலகி விட்டதாக நீ நினைக்கிறாய்.

ஆனால், அது நிச்சயம் வாழ்க்கையின் முடிவே அல்ல. இதுதான் ஒரு புதிய தொடக்கம் என்கிறார் கிருஷ்ணர். பிறகு மீண்டும் அர்ஜுனன் எல்லாம் இழந்துவிட்டேன் என்று நீங்களே சொல்கின்ற பொழுது எப்படி நம்பிக்கை பெற முடியும் என்று அர்ஜுனன் கேட்க..

கிருஷ்ணர் அங்கு ஒரு அழகான பதிலை கூறுகிறார். நீ இழந்ததை நினைத்து வருந்துவதை விடவும் இன்னும் உன்னுடன் இருப்பதை நினைத்து நன்றி உடன் இரு என்கிறார். எதுவாக இருந்தாலும் உன் முயற்சியை கைவிடாதே.

நம்பிக்கை என்பது எல்லாம் நம்முடைய விருப்பப்படி நடக்கும் என்பது அல்ல. எதை இழந்தாலும் மீண்டும் முயற்சி செய்வதே உண்மையான நம்பிக்கை.

ஆதலால், நீ சந்தித்த தோல்வியை நினைத்து அதே இடத்தில் நின்று விடாதே. அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு மீண்டும் உன்னுடைய பயணத்தை நம்பிக்கையோடு தொடங்கு என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக சில கதவுகள் மூடப்படலாம்.

சில பாதைகள் முடிவிற்கு வரலாம். நம்முடைய கனவுகள் நம்மை விட்டு தூரமாக செல்லலாம். அதனால் வாழ்க்கை எப்பொழுதும் முடிவதில்லை. ஒரு மனிதனுடைய முயற்சி செய்யக் கூடிய துணிவு இருக்கும் வரை நிச்சயம் அவனுக்கான பாதைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். இழப்புகள் முடிவல்ல.

மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்.. | Mahabharata Says Loss Is Not End But A New Start

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

நம்பிக்கைதான் ஒரு மனிதனுடைய உண்மையான வெற்றி. ஆக, இதை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் பலருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துயரமும் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் நான் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு பெரும் போராட்டம் இருக்கலாம். வாழ்க்கை எந்த இடத்தில் நிறுத்தி வைக்கிறதோ அதை இடத்திலிருந்து நீங்கள் மீண்டும் முயற்சி செய்து தொடங்குங்கள்.

அங்கிருந்து உங்களுக்கான ஒரு பாதையை நீங்களே உருவாக்குங்கள். உங்களை நேசியுங்கள். உங்களுக்காக வாழ பாதை உருவாக்குங்கள். அதில் நம்பிக்கை விதையுங்கள் ஒரு நாள் அதற்குரிய பலன் தேடி வரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US