2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?
சூரியன் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறார். இதனால் எல்லா ராசிகளுக்கும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். கன்னி புதன் பகவானுடைய ராசி அதனால் சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சி இந்த ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு இந்த சூரியனுடைய பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலை வாய்ப்பு போட்டி, நோய் எதிர்ப்புகள், ஆகியவற்றை வலுப்படுத்த போகிறது. இவர்களிடம் போட்டியிட கூடியவர்கள் இந்த காலகட்டங்களில் வீழ்ச்சியை சந்திப்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
கடகம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் தைரியம் வீரியம் உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கப்போகிறது. இவர்களுடைய துணிச்சலை வளர்த்துக் கொள்வதன் வழியாக இவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட போகிறார்கள். நம்பிக்கையுடன் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டம் நேர்மறையான பலன் கொடுக்கப் போகிறார். செலவுகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப் போகிறார். குழந்தைகள் வழியாக நல்ல பலன் கிடைக்கும். வெளியுறவுத்துறை மற்றும் ஆன்மீகம் ஏற்றுமதி துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்ல நேரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |