வீட்டின் நிலைவாசலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
சொந்த வீடு என்பது எல்லோருடைய கனவாக இருக்கிறது. அப்படி ஒரு நிலம் வாங்கி வாஸ்து பார்த்து நமக்கு பிடித்தார் போல் வீடு கட்டி பார்ப்பதே சந்தோசம் தான்.
ஆனால் என்னதான் வாஸ்து பார்த்து கட்டினாலும் வீட்டில் குடிபுகுந்த பிறகு வீட்டை பராமரிப்பது மிகவும் அவசியம்.
அதில் முதலாவதாக வீட்டின் நிலை வாசல். இதை தான் நம் வீட்டின் ராஜ வாசல் என்பார்கள். இந்த ராஜா வாசலில் தான் அதிர்ஷ்ட தேவதைகளும் வாஸ்து தேவதைகளும் மகாலட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம்.
மேலும் இந்த ராஜா வாசலான நிலை வாசல் தான் நம்மை நம் வீட்டை பாதுகாக்கும் ஒரு முக்கியான ஒன்றாக இருக்கிறது
நாம் இப்பொழுது இந்த நிலை வாசலை எப்படி பராமரித்து நம் வீட்டை பாதுகாப்பது என்பது பற்றி பார்ப்போம்.
வீட்டை பாதுகாக்கும் தேவதைகள் முன் வாசலில் இருப்பதால் தேவை இல்லாத சத்தங்கள் அந்த கதவுகளில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சத்தம் வந்தால் எண்ணெய் ஊற்றி சீராக பராமரித்தல் அவசியம்.
நம் வாசலுக்கு நேர் எதிராக மரங்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது நம் வீட்டிற்கு வரும் மஹாலக்ஷ்மியின் அருளை தடுப்பது போல் ஆகிவிடும்.
நிலை வாசலானது நம் வீட்டில் உள்ள மற்ற கதவுகளை காட்டிலும் நிலை வாசல் பெரிதாக அமைத்திருப்பது சிறப்பை தரும்.
நிலை வாசலுக்கு வெள்ளி, செவ்வாய் தோறும் மஞ்சள் குங்குமம் வைத்து பத்தி சூடம் காண்பிப்பது நம் வீட்டில் உள்ள செல்வ வளங்களை பெருக செய்யும்.